தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு ஜாக்டோ-ஜியோ கோரிக்கை!

27 May 2026, 8:47 pm
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற  முதல்வர் விஜய்க்கு ஜாக்டோ-ஜியோ கோரிக்கை!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு ஜாக்டோ-ஜியோ கோரிக்கை!

சென்னை, மே 27- தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய்க்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பு தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்து களையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் நீண்ட நாள் கனவான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, புதிய முதலமைச்சர் உடனடியாக நிறைவேற்றுவார் என ஜாக்டோ-ஜியோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அந்த அமைப்பு முதன்மையாக வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஊழியர்களின் கோரிக்கைகள்

மேலும், கடந்த 2010 ஆகஸ்ட்டுக்கு முன்பாகப் பணியேற்ற ஆசிரியர்களுக்கு ‘டெட்’ (TET) தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கி ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடி உள்ளிட்ட துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவும், பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யவும் ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தியுள்ளது.

காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 சதவீதத்திற்கும் அதிகமான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பு, புதிய அரசின் மக்கள் நலத்திட்டங்களைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.