கருவூல அலுவலர் மீது நடவடிக்கை கோரி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
3 Dec 2025, 2:59 pm
<p><strong>கருவூல அலுவலர் மீது நடவடிக்கை கோரி ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாகப்பட்டினம், டிச.3 - நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலத்தின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து செவ்வாயன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் த.ஸ்ரீதர், பா.ரவி, வெ.சரவணன், சி.முத்துசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அ.அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாநிலச் செயலாளர் சு.வளர்மாலா உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிதிக் காப்பாளர் மு.காந்தி நன்றி கூறினார். நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தம்முடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் நவம்பர் மாத ஊதியத்தை அனுமதிக்க மறுத்து நிறுத்திய, மாவட்டக் கருவூல அலுவலர் அருணாசலம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.</p>
