தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடுக

18 Nov 2025, 3:21 pm
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடுக
<p><strong>தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிடுக</strong></p> <p>திருப்பூர், நவ.18 &ndash; திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஆசிரி யர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு செயல் மேடை (ஜாக்டோ ஜியோ) சார்பில் &nbsp;திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, செவ்வாயன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்கு வது, அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை &nbsp;உடனடியாக நிரப்புவது, சிறப்பு காலமுறை ஊதி யம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி உள் ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு வரை யறுக்கப்பட்ட ஊதியம் வழங்குவது, ஒருங் கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற் றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி &nbsp;நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்வது, உள் ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறை களிலும் தனியார் முகமை மூலம் பணியாளர் களை நியமனம் செய்வதை உடனடியாகத் தடை &nbsp;செய்ய வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 &nbsp;மாத கால பணி நீக்கக் காலத்தை நீதிமன்ற உத்தர வுப்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண் டும், தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் &nbsp;90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பள்ளி கல்வித்துறை அரசாணை எண் 243- ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் நவம்பர் &nbsp;18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்தம் நடத்துவது என்று தீர்மா னித்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்ற அடையாள வேலை நிறுத்தத்தில் அரசு &nbsp;ஊழியர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் வேலை &nbsp;நிறுத்தத்தில் பங்கேற்றனர். அதேபோல் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் &nbsp;பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் வேலை செய் யும் ஆசிரியர்களில் 1600க்கும் மேற்பட்டோர் இந்த மாவட்டத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டனர். முன்னதாக ஜாக்டோ ஜியோ சார்பில் நவம் பர் 10 முதல் 14ஆம் தேதி வரை வாகனப் பிரச்சா ரம் மேற்கொண்டு மக்களிடம் போராட்டத்திற் கான நோக்கங்களை விளக்கினர். திருப்பூர் &nbsp;மாவட்ட ஆட்சியரகம், அவிநாசி, ஊத்துக்குளி, &nbsp;தாராபுரம், உடுமலை, காங்கேயம் உள்ளிட்ட மாவட்டத்தின் மற்ற பல பகுதிகளிலும் ஜாக்டோ &nbsp;ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி னர். &nbsp;திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக &nbsp;நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிர மணியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலை மை ஏற்றனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட &nbsp;ஒருங்கிணைப்பாளர்கள் கனகராஜா, ஜோசப், பசுபதி, நாகராஜ், செல்வகுமார் ஆகியோர் உரை யாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொரு ளாளர் அந்தோணி ஜெயராஜ், கிராம செவிலி யர் சங்க மாநில துணைத் தலைவர் அன்னபூ ரணி, கல்வி நிர்வாகத்துறை அலுவலர் சங்கம் &nbsp;வினோத்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். &nbsp;ஐடிஐ ஊழியர் சங்க சிவசங்கர் நன்றி கூறி னார். தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளர் கே.செந்தில்குமார், வி.எம்.ஆறுமுகம் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இல.தில்லையப்பன், ராஜகோபால் எம். மேகலிங்கம் ஜெயலட்சுமி, நந்தகுமார், எஸ். சிவராஜ், ராஜேஸ், டி.மாசிலாமணி, காந்திமதி உள்ளிட்டோர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் டி.சாந்தி நிறைவுரை ஆற்றினார். சுமார் 200 பேர் பங் கேற்றனர். பொருளாளர் சுமதி நன்றி கூறி னார். ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளைத் தலை வர் சுகந்தன் தலைமையில் நடைபெற்ற ஜாக் டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ &nbsp;அமைப்பின் பல்வேறு துறை நிர்வாகிகளான செல்வி, கே.சதாசிவம், இளம்பரிதி, ப.பாலசந்தி ரன், சி.ரங்கசாமி, சு.ராஜேஸ்வரி, ஆர்.ராமன், &nbsp;சுசீலா, க.பழனிச்சாமி ஆகியோர் உரையாற்றி னர். உடுமலை உடுமலைப்பேட்டை மற்றம் மடத்துக்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தின் முன்பாக ஒரு &nbsp;நாள் அடையாள வேலை நிறுத்தம் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் &nbsp;மன்ற தலைவர் ஜோதி ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர் சங்கம் பாலு, ஆரம்பப்பள்ளி கூட்டணி பாலு, பாஸ்கர், &nbsp;தமிழக ஆசிரியர் கூட்டணி பன்னீர்செல்வம், ஆசி ரியர் சங்கம் ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் வைரமுத்து, ஆரம் பப்பள்ளி கூட்டணி வசந்த மோகன் உள்ளிட் டோர் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். &nbsp;உடுமலைப்பேட்டை வட்டாச்சியர் அலுவல கத்தின் முன்பு ஜாக்டோ &ndash; ஜியோ மாவட்ட ஒருக் கிணைப்பாளர் வேலுமணி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் அம்சராஜ், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகவேல், ஆசிரியர் &nbsp;கூட்டணி தமிழ்வர்ணன், அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி யன், அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் தங்கவேல், கிராம அலுவலர் சங்கத்தின் ஈஸ்வரன், முது கலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் முனியப் பன், ஊரக வளர்ச்சி துறையின் ஜெயப்பிரகாஷ், &nbsp;சத்துணவு ஊழியர் சங்கத்தின் எலிசபத் மற்றும் &nbsp;கிராம ஊழியர் சங்கத்தின் முத்துசாமி உள்ளிட்ட &nbsp;திரளனோர் கலந்து கொண்டனர். அவிநாசி அவிநாசி தாலுகா அலுவலகம் முன்பு ஜாக் டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செய லாளர் செந்தில்குமார் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், வருவாய் கிராம ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் நடராஜன், தமிழக &nbsp;ஆசிரியர் கூட்டணி துணைத் தலைவர் துரைசாமி, &nbsp;கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க &nbsp;வட்டாரச் செயலாளர் சந்திரசேகர், சமூக நலத் துறை சங்கப் பொறுப்பாளர் விஷ்ணுவர்தன், ஆசிரியர் சங்க வட்டாரத் தலைவர் மூர்த்தி, கிராம &nbsp;செவிலியர் சங்கம் பொறுப்பாளர் சுகன்யா மற் றும் தலைமை ஆசிரியர்கள் தனபால், ராஜேந்தி ரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.