தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ வாகனப் பிரச்சாரம்

15 Nov 2025, 4:09 pm
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ வாகனப் பிரச்சாரம்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ வாகனப் பிரச்சாரம்

திருப்பூர், நவ.15- தேர்தல் வாக்குறுதிகளை நிறை வேற்றக்கோரி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ ஜியோ  கூட்டமைப்பினர் வெள்ளியன்று  வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் வாக்குறுதி படி சத்துணவு,  அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம  உதவியாளர், ஊர்ப்புற நூலகர், எம் ஆர்.பி செவிலியர்கள், பிபிபி & சிஒபி  ஊழியர் பகுதி நேர ஆசிரியர், கணினி  ஆசிரியர், தொகுப்பூதிய ஆசிரியர் மற் றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதி யம் சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்கா லமாக உயர்நீதிமன்ற ஆணையின்படி முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்றக் கோரி நவம்பர் 18 ஆம் ஒரு நாள்  அடையாள வேலை நிறுத்தம் நடைபெ றும் என ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பி னர் அறிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதி யாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் நவ.10 முதல் நவ.14 வரை அரசு ஊழியர்  ஆசிரியர்கள் வாகன பிரச்சார இயக் கம் நடைபெற்றது. வெள்ளியன்று  திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவல கம், திருப்பூர் தொழில் பயிற்சி அலுவல கம், திருப்பூர் மருத்துவக் கல்லூரி அலு வலகம், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், கோட்டப் பொறியாளர்   அலுவலகம், கோட்டப் பொறியாளர் தரக் கட்டுப்பாடு அலுவலகம், மாநில வணிகவரித்துறை அலுவலகங்கள், வடக்கு வருவாய் வட்டாட்சியர் கோட் டாட்சியர் சார்நிலை கருவூலம் ஆகிய  இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடை பெற்றது. இதில், ஜாக்டோ ஜியோ  மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்  ஆ.அம்சராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்க மாவட்டச் செயலாளர் மா.பாலசுப் பிரமணியன், இணைச்செயலாளர் ராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.