தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ – ஜியோ பிரச்சார இயக்கம்

12 Nov 2025, 3:20 pm
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ – ஜியோ பிரச்சார இயக்கம்
<p><strong>தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ &ndash; ஜியோ பிரச்சார இயக்கம்</strong></p> <p>உடுமலை, நவ.12- தேர்தல் காலத்தில் அரசு ஊழியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் உள் ளிட்ட கடந்த கால ஆட்சியில் நிறுத்தி &nbsp;வைக்கப்பட்ட சலுகைகளை வழங்கப்ப டும் என அளித்த வாக்குறுதியை உடனடி யாக அமல்படுத்தக் கோரி புதனன்று &nbsp;உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் &nbsp;முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் &nbsp;பிரச்சாரம் இயக்கம் தொடங்கினர். உடுமலை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு தொடங்கிய இந்த பிரச்சார &nbsp;இயக்கத்தில், அரசு ஊழியர்களுக்கு அறிவித்த திட்டங்களை அமல்படுத்த &nbsp;வேண்டும். குறிப்பாக பழைய ஓய்வூ திய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ககன்தீப் சிங் தலைமையிலான குழு அளித்த ஆய்வு அறிக்கை தேர் தல் வாக்குறுதிக்கு மாறாக உள்ளது. &nbsp;உடனடியாக பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் &nbsp;சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வரு வாய் கிராம உதவியாளர்கள் மற்றும் தொகுப்பூதியத்தில் வேலை செய்யும் செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க &nbsp;காலத்தை உயர்நீதி மன்ற ஆணைப்படி &nbsp;பணிக்காலமாக முறைப்படுத்த வேண் டும். தமிழகத்தில் அரசு அலுவலகத்தில் &nbsp;30 சதவீதத்திற்கும் மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு &nbsp;கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி &nbsp;நவ.18 ஆம் தேதி ஒரு நாள் அடையாள &nbsp;வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்றனர். இந்த பிரச்சார இயக்கத்திற்கு ஜாக்டோ - ஜியோ வட்டார ஒருங்கி ணைப்பாளர் வெங்கிடுசாமி தலைமை &nbsp;வகித்தார். மாநில உயர் மட்டக்குழு &nbsp;உறுப்பினர் அம்சராஜ், மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழு உறுப்பினர்கள் பாலசுப் பிரமணியன், வேலுமணி மற்றும் வட் டார ஒருங்கிணைப்பாளர்கள் தங்க வேல், தமிழ் வர்ணன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். அதேபோல் மடத்துக்குளம் &nbsp;வட்டாட் சியர் அலுவலகம் முன்பு பிரச்சார இயக் கம் நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.