ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
27 Dec 2025, 6:08 pm
<p><strong>ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்த ஆயத்த மாநாடு</strong></p>
<p>தேர்தல் கால வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கான உரிமை மீட்பு ஆயத்த மாநாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் கந்தன்,விக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. சீனுவாசன் வரவேற்றார் . மாநாட்டினை உதயசூரியன் துவக்கி வைத்தார். மாநாட்டின் சிறப்புரையாக ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், தியாகராஜன், கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அருள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தகுமார், மேகநாதன் உள்ளிட்ட மாநில ,மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். நிதி காப்பாளர் கங்காதரன் நன்றியுரை கூறினார்.</p>
