தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டம்: வலுக்கும் போராட்டம்

19 Aug 2026, 11:12 pm
ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டம்: வலுக்கும் போராட்டம்

ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டம்: வலுக்கும் போராட்டம்

திருப்பூர், ஆக.19-கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை அமைக்கப்படும் பிபிஎல் - ஐடிபிஎல் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை விளை நிலங்களுக்கு பதிலாக சாலையோரம் அமைக்க வலியுறுத்தி, திருப்பூரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கிருஷ்ணகிரி முதல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வரை 270 கிலோமீட்டர் தூரத்திற்கு இத்திட்டம் சாலையோரமாகவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளகோவில் முதல் இருகூர் வரையிலான 70 கிலோமீட்டர் தொலைவிற்கு, விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்கள் வழியே குழாய் பதிக்கும் பணிகள் காவல்துறையின் பாதுகாப்போடு நடந்து வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகள் இத்திட்டத்திற்கு எதிராக போராடி வரும் நிலையில், விளைநிலங்களின் மதிப்பு மற்றும் வாழ்வாதார பாதிப்புகளை கணக்கில்கொள்ளாமல் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு அரசு நில இழப்பீட்டை சந்தைமதிப்பில் 20 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தி அரசாணை (எண்: 813) வெளியிட்டதைத் தொடர்ந்து, காவல் துறையை பயன்படுத்தி பணிகள் வேகமெடுத்துள்ளன. நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் உள்ளிட்ட பயிர்களைஅறுவடை செய்யக்கூட அனுமதிக்காமல், எந்திரங்களை கொண்டு அழித்து அராஜகப் போக்கில் பணிகள் நடத்தப்படுவதாகவும், எதிர்க்கும் விவசாயிகள் கைது செய்யப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அனைத்து விவசாயச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளானோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளிக்கப்பட்ட மனுவில், வெள்ளகோவில் முதல் இருகூர் வரையிலான 70 கி.மீ தூரத்திற்கும்குழாய்களை சாலையோரமாகவே பதித்துச் செல்ல வேண்டும். நிலங்கள் வழியே அமைப்பதாக இருந்தால், தற்போதைய நடைமுறை சந்தை மதிப்பீட்டின்படி உரிய இழப்பீடு வழங்கவேண்டும். (ஏற்கனவேஇந்நிறுவனம் உந்து நிலையம் அமைக்க ஒரு சென்ட் நிலத்திற்கு ரூ.2 லட்சம் வரை வழங்கியுள்ள நிலையில்,விவசாயிகளுக்கும் அதே அளவிலான இழப்பீடு வழங்குவதே நியாயமானது). விவசாயிகளுடன் சுமுக உடன்பாடு எட்டப்படும் வரை, காவல்துறையை பயன்படுத்தி குழாய் பதிக்கும் பணிகளைஉடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆட்சியருடனான பேச்சுவார்த்தையில் தெளிவான முடிவு எட்டப்படாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதையடுத்து, நிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக தொடர்ந்து கூட்டாக போராட்டங்களை முன்னெடுப்பதென அனைத்துவிவசாய சங்கங்களும் அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.