ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்
17 Jun 2026, 10:08 pm

ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்

தருமபுரி, ஜூன் 17- துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை நடை பெற்று வருகிறது. 2025 – 26 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் இடைநின்ற மாணவர்களின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை கண்காணிக்கும் நோக்கில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 5 ஆம் தளத்தில் உள்ள அறை எண் 610-ல் மாவட்டக் கட்டுப்பாட்டு அறை கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறை மூலம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் இடைநின்ற மாணவர்கள் மற்றும் துணைத் தேர் வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தொழில்நுட்பக் கல் லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம், 12 ஆம் வகுப்பை சேர்ந்த 22 மாணவர்களும், 10 ஆம் வகுப்பை சேர்ந்த 19 மாணவர்களும் தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர விருப்பம் தெரிவித்த னர். இதன் தொடர்ச்சியாக, கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ நேரடி சேர்க்கை முகாம் நடை பெற்றது.

இதில் 11 மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டனர். அவர்களில் 10 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிறுவனங்களிலும், ஒரு மாணவர் பாலிடெக்னிக் கல்லூரி யிலும் சேர்க்கப்பட்டனர். உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்க ளுக்கு தனியார் பள்ளிகளின் இயக்குநர் எஸ்.சுகன்யா சேர்க்கை கடிதங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா, உயர்கல்வி கட்டுப்பாட்டு மைய பொறுப்பு அலுவலர் முத்தமிழ்ச்செல் வன், ஐடிஐ முதல்வர் சிவக்குமார், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி அலுவலர்) அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.