தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

1 Apr 2026, 4:02 pm
விளையாட்டு

உலகக்கோப்பையில் மீண்டும் ‘நாக் அவுட்’ கண்ணீர் கடலில் இத்தாலி

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பையின் 23ஆவது சீசன், இந்த ஆண்டு ஜூன்  11ஆம் தேதி அமெரிக்கா, மெக்சிகோ,  கனடா ஆகிய நாடுகளில் கூட்டாக நடை பெறுகிறது. மொத்தம் 48 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த உலகக்கோப்பை தொட ருக்கான ஐரோப்பிய தகுதிச் சுற்றில் இத்தாலி, போஸ்னியா  அண்ட் ஹெர்ஸ கோவினாவிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம், தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக்கோப்பைத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி இழந்து, அந்நாட்டு ரசிகர் களுக்குப் பேரதிர்ச்சியை அளித் துள்ளது. கண்ணீர் நான்கு முறை உலகச்சாம்பி யனான இத்தாலி அதிரடிக்கு பெயர் பெற்ற அணியாகும். ஆனால் தொடர்ந்து 3 உலகக்கோப்பைத் தொடர்களுக்குத் (2018, 2022, 2026) தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும். போஸ்னியா அணிக்கெதிரான ஆட்டத்தின் போது, மைதானத்தில் குவிந்து இருந்த இத்தாலி ரசிகர்கள் தோல்வியை ஜீரணிக்க முடியாமலும், மீண்டும் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியதை தாங்கிக் கொள்ள முடியாமலும் கண்ணீர்விட்டு  கதறி அழுதனர்.அதேபோல இத்தாலி நாட்டிலும் ரசிகர்கள் வீடுகளிலும், கிளப்களிலும் அழுதனர். இதனால் இத்தாலி கண்ணீர் கடலில் காட்சி அளித்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தியதன் மூலம் போஸ்னியா  அண்ட் ஹெர்ஸகோவினா உலகக்கோப்பை ‘குரூப் பி’ பிரிவில் இடம் பிடித்துள் ளது. கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் கத்தார் ஆகிய அணிகளுடன் அந்நாடு மோதவுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு போஸ்னியா  அண்ட் ஹெர்ஸ கோவினா உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும். பயிற்சியாளருக்கு ஆதரவு தோல்விக்குப் பின்னர் இத்தாலி அணியின் பயிற்சியாளர் ஜென்னா ரோ, “வீரர்கள் காட்டிய உழைப்பிற்கும் முயற்சிக்கும் இந்தத் தோல்வி அவர்களுக்குத் தகுதியானது அல்ல. இதை ஜீரணிப்பது கடினம்” என்று அவர் கூறினார். இந்த அதிர்ச்சி தோல்வி காரணமாக பயிற்சியாளர் ஜென்னாரோவை இத்தாலி கால்பந்து சம்மேளனம் நீக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் பதவியில் நீடிப்பார் என்று இத்தாலி கால்பந்து சம்மேளனம் ஜென்னாரோவிற்கு ஆதரவு அளித்துள்ளது.

ஐபிஎல் இன்றைய ஆட்டம்

கொல்கத்தா - ஹைதராபாத் இடம் : கொல்கத்தா, மேற்குவங்கம் /  நேரம்  :  இரவு 7:30 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.