விஜயபிரபாகரனை வெற்றி பெறச் செய்வது நமது கடமை
10 Apr 2026, 5:30 am

விஜயபிரபாகரனை வெற்றி பெறச் செய்வது நமது கடமை

ப.மாணிக்கம் தாகூர் எம்.பி பேச்சு. விருதுநகர், ஏப்.9- விருதுநகரில் போட்டியிடும் விஜயபிரபாகரனை வெற்றி பெறச் செய்வது நமது கடமை என தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் அலுவலக திறப்புவிழா நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மாணிக்கம் தாகூர் எம்.பி ஆகியோர் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அ.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகன், முத்துவேல், நகர செயலாளர் எம்.ஜெயராஜ், ஒன்றியச் செயலாளர் பி.நேரு, கே.ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர் பேசுகையில், அணி அணியாக தொண்டர்களுக்கு சொந்தக்காரர் விஜயகாந்த். அவரின் புதல்வன் விருதுநகர் மக்களுக்கு நல்லது செய்ய வந்துள்ளார். அவரை வெற்றி பெறச் செய்வது நமது கடமை என்றார்.

ஒரு பக்கம் காமராஜரின் வாரிசுகள், எதிரணியில் கோட்சேவின் வாரிசுகள். நடப்பது மகாபாரத யுத்தம். இதில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றார். அதனைத் தொடர்ந்து விஜய பிரபாகரன் பேசுகையில், விருதுநகர் தொகுதி மக்களின் பிள்ளையாக கடைசி வரை இருப்பேன். விருதுநகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வருவேன். வரும் தொடர்ந்து வெற்றி பெறும் பட்சத்தில் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். விருதுநகர் தொகுதி மக்களின் குறைகளை தீர்க்க பாடுபடுவேன் என்றார்.