தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக தலைவர் மீதான வழக்கை ரத்து செய்தது சரியல்ல! சனாதன ஒழிப்பு பேச்சு குறித்த நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது!

21 Jan 2026, 2:28 pm
பாஜக தலைவர் மீதான வழக்கை ரத்து செய்தது சரியல்ல! சனாதன ஒழிப்பு பேச்சு குறித்த  நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது!

பாஜக தலைவர் மீதான வழக்கை ரத்து செய்தது சரியல்ல! சனாதன ஒழிப்பு பேச்சு குறித்த  நீதிபதியின் தீர்ப்பு அபத்தமானது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்

சென்னை, ஜன. 21 - பாஜக தலைவர் அமித் மாளவி யாவின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கு எதிராகப் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து  செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுதொடர்பாக கூறப்பட்டி ருப்பதாவது: மத வன்முறையைத்  தூண்டிய பாஜக தலைவர் “சனாதன ஒழிப்பு” பற்றி தமிழ்  நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்க மாநாட்டில் பேசி யது குறித்து சமூக வலைதளத்தில் எதிர்வினை ஆற்றிய அமித் மாள வியா 80 சதவிகிதமான மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்க சொல்கிறீர்களா? என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு எதிராகவே முதல் தகவல் அறிக்கை திருச்சி நகர  காவல் துறையால் பதிவு செய்யப் பட்டிருந்தது. நீதிக்கு அப்பாற்றப்பட்ட தவறான தீர்ப்பு! அமித் மாளவியா மீதான அந்த முதல் தகவல் அறிக்கையை, தற் போது ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி,  தீர்ப்பில் கூறியுள்ள கருத்துக்கள் நீதி சார்ந்ததாகவோ, சமூக யதார்த்தங் களை உள்வாங்கியதாகவோ, அர சியல் சாசனத்தின் விழுமியங் களுக்கு உட்பட்டதாகவோ இல்லை யென்பதை அழுத்தமாக சுட்டிக் காட்டுகிறோம். மிகவும் தவறான, ஆபத்தான விளக்கத்தை நீதிபதி முன்வைத்து இருக்கிறார். நீதிபதி அளித்த  அபத்தமான விளக்கங்கள் “முழு வழக்கும் ஒழிப்பு’(ozhippu) என்ற சொல்லைச் சுற்றியே அமை கிறது; அந்தச் சொல் மிகவும் முக்கிய மானது. ‘அழித்தல்’ (abolish) என்ற சொல், ஏற்கெனவே உள்ள  ஏதோ ஒன்று இருக்கக் கூடாது என்ப தைக் குறிக்கிறது. இதை தற்போ தைய வழக்கிற்கு பொருத்தினால், சனாதன தர்மம் இருக்கக் கூடாது என்றால், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களும் இருக்கக் கூடாது என்பதைக் குறிக்கும். சனா தன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு மக்கள்குழு இருக்கக் கூடாது என்றால், அதற்கான சரியான சொல் ‘இனப்படுகொலை’ (geno cide) ஆகும். சனாதன தர்மம் ஒரு  மதமாக இருந்தால், அது ‘மதப் படுகொலை’ (religicide) ஆகும். மேலும், சூழல் அழிப்பு (ecocide), உண்மையழிப்பு (factocide), பண்பாட்டு அழிப்பு, பண்பாட்டு இனப்படுகொலை (culturicide) ஆகியவற்றை உள்ளடக்கிய பல் வேறு முறைகள் மற்றும் தாக்கு தல்களின் மூலம் மக்களை ஒழிப்ப தையும் இது குறிக்கிறது. எனவே, ‘சனாதன ஒழிப்பு’ என்ற தமிழ்ச் சொற்றொடர் தெளிவாகவே ‘இனப் படுகொலை’ அல்லது ‘பண்பாட்டு அழிப்பு’ என்பதையே குறிக்கும். இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரின் பேச்சை கேள்விக்கு உள்ளாக்கிய மனுதாரரின் பதிவை வெறுப்பு பேச்சாகக் கருத முடி யாது” என்ற நீதிபதியின் மேற் கண்ட விளக்கங்கள் மிகவும் அபத்த மானது. வறுமையை ஒழிப்பதென்றால்  ஏழைகளை கொலை செய்வதா? ஒரு பிற்போக்குச் சித்தாந்தத்தை, மக்களைச் சாதிகளாகப் பிரித்து  உயர்வு தாழ்வு கற்பிக்கும் கருத்தி யலை, சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துபவர்களுக்காக சமூக ஏற்பை விதைப்பதற்கான ஒரு கருத் தாக்கத்தை ஒழிப்பது என்பது,  எப்படி அதைப் பின்பற்றுபவர்களை ஒழிப்பதாக மாறும்? அண்ணல் அம்பேத்கர் அவர்கள் “சாதி ஒழிப்பு” பேசினார். அதன் பொருள் என்ன? சமூகத்தில் மனிதரை மனி தர் இழிவுப்படுத்துகிற, பாகு படுத்துகிற, வேறுபடுத்துகிற சாதி  என்கிற கட்டமைப்பு உடைத் தெறியப்பட வேண்டும் என்பது தானே. ஒழிப்பு என்பதாலேயே படு கொலைக்கான தூண்டுதல் என்று சொன்னால் ஏற்க முடியுமா? வறுமை  ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்று கூறுவ தெல்லாம் சம்பந்தப்பட்ட மக்களை ஒழித்துக் கட்டுவது என்று பொருள் கொண்டால் அமைச் சர்களே இத்தகைய வார்த்தை களை பயன்படுத்துவது குற்றம் என்றாகி விடும். மதவெறிப் பேச்சுக்கு  விந்தையான விளக்கம் இப்படிக் கூறிய நீதிபதி “80 சதவிகித மக்களை இனப்படு கொலை செய்ய சொல்கிறீர் களா?” என்று அமித் மாளவியா  கேட்டது குற்றமல்ல. அவர் எழுப்பியது கேள்விதான். அவர் போராட்டம் எதையும்  தூண்டவில்லை என்றெல்லாம்  விளக்கம் கொடுத்து இருப்பது விந்தையாக உள்ளது.  சனாதன தர்மத்திற்கும் நால் வர்ண முறைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா? நால்வர்ண முறை தங்களை இழிவு செய்கிறது என்று கருது பவர்கள் அத்தகைய முறை இருக்கக் கூடாது என்று பேசக்  கூடாதா? “தீண்டாமை ஒழிக்கப் பட்டு விட்டது” என்று அரசியல் சாசனம் கூறியது சனாதன தர்மத்திற்கு எதிரான பிர கடனம் இல்லையா? தலைமை நீதிபதி தலையிட வேண்டும்! சனாதனம் என்றால் நித்தி யமானது, அழிவற்றது என்று  கூறுவதே அறிவியலுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் தடை அல்லவா? இந்த  கருத்தை ஏற்றுக் கொண்டிருந் தால் பெண் கல்வி சாத்தியம் ஆகி இருக்குமா? சாதாரண அலுவலக ஊழியரில் துவங்கி  நீதிபதிகள் வரை பெண்கள் அமர்ந்திருப்பது சனாதன கருத் தியலை எதிர்த்த போராட்டத் தின் விளைவு தானே. ஆகவே, இந்த தீர்ப்பு  ஏற்கத்தக்கதல்ல. நீதிபதியின்  கருத்துக்கள் மறுபரிசீல னைக்கு உட்படுத்தப்பட்டு, திரும்பப் பெறப்பட தேவை யான நடவடிக்கைகளை உயர்  நீதிமன்ற தலைமை நீதிபதி  அவர்கள் எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.