தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரைகுறை உண்மைகளை வைத்து தலைவர்களை மதிப்பிடுவது சரியல்ல! பெரியாரையும் பாரதியையும் எதிரெதிராக நிறுத்தும் சங் பரிவார் சூழ்ச்சிக்கு இரையாகிவிடக்கூடாது

17 Dec 2025, 4:11 pm
அரைகுறை உண்மைகளை வைத்து தலைவர்களை மதிப்பிடுவது சரியல்ல! பெரியாரையும் பாரதியையும் எதிரெதிராக நிறுத்தும் சங் பரிவார் சூழ்ச்சிக்கு இரையாகிவிடக்கூடாது
<p><strong>அரைகுறை உண்மைகளை வைத்து தலைவர்களை மதிப்பிடுவது சரியல்ல! பெரியாரையும் பாரதியையும் எதிரெதிராக நிறுத்தும் சங் பரிவார் சூழ்ச்சிக்கு இரையாகிவிடக்கூடாது</strong></p> <p>தமுஎகச வேண்டுகோள் சென்னை, டிச. 17 - தந்தை பெரியாருக்கு மகாகவி பாரதியை முன்னிறுத்தி, வலதுசாரி கள் மேற்கொள்ளும் அரசியல் சூழ்ச்சிக்கு முற்போக்காளர்கள் இரையாகிவிடக் கூடாது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆர்எஸ்எஸ்-சின் பரிவாரங் களில் ஒன்றான &lsquo;விஜில்&rsquo; நடத்திய பாரதி விழாவில், நாம் தமிழர் கட்சி யின் சீமான் கலந்து கொண்டு பேசி னார். தன்னை முழுமையாக காவி களோடு கரைத்துக் கொண்டு விட்ட சீமான், அந்த விழாவில் மகாகவி பாரதி என்ற பேருருவத்தின் பின் னால் ஒளிந்து கொண்டு, தந்தை பெரி யார் என்ற பேருருவத்தின் மீது &nbsp;வழக்கம்போல சேற்றை வாரி யிறைத்தார். பெரியாரையும் பாரதி யையும் எதிரெதிராக நிறுத்தி சங்- பரிவாரின் சாதிய - மதவாத அழுக்கு அரசியலை எந்தக் கூச்சமும் இல்லாமல் முன்வைத்தார். &nbsp;சீமானின் இந்தப் பேச்சு கடும் கண்டனங்களுக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கும் நிலையில், சீமானுக்கு பதிலடி என்ற பெயரில் பெரியாரியவாதிகள் என்ற முகா மைச் சேர்ந்த சிலர், பாரதியை விமர் சிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர் &nbsp;கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் &nbsp;அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: பாரதியார், காந்தியடிகள், நேரு &nbsp;உள்ளிட்ட இந்நாட்டின் பல ஆளுமை களை அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் வரும்போது போற்றுகின்ற செயல்கள் எவ்வளவு நடைபெறு கிறதோ, அதே அளவு அவர்களை தூற்றுவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பொது வாழ்வில் இருந்த வர்கள் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த காலம் போல் வலதுசாரிகள் இந்த ஆளுமைகளை விமர்சித்தால்&nbsp;நமக்கு சிக்கலேதும் இல்லை. அது நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதன் பொருள் ஆகும். ஆனால், முற்போக்கா ளர்களாக அறியப்பட்ட சில பெரியாரி யவாதிகளில் இப்படிப்பட்ட விமர்சனங் களை முன் வைப்பது சரியான செயல் ஆகாது. &nbsp;ஆளுமைகளை அவர்களின் காலத்தோடு பொருந்திப் பார்க்க வேண்டும் எந்த ஆளுமைகளையும் அவர்கள் வாழ்ந்த காலத்தோடு பொருத்திப் பார்ப்ப தும், காலவரிசையோடு அவர்கள் செயலை மதிப்பிடுவதுமே சரியான செயலாகும். தியாகராஜர் இன்றைக்கு உயர்சாதி சார்ந்த இசையின் குறியீடாக இருக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் &nbsp;மன்னரின் அதிகாரத்திற்கு எதி ராகவே தனது பக்தி சார்ந்த இசையை பயன்படுத்தினார். கம்பர் இராமா யணத்தை எழுதினார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சோழப் பேரரசும், அதன் மக்கள் விரோத செயல் பாடுகளுக்கும் எதிரான மனோநிலை யோடே, தான் விரும்பும் தேசத்தை கற்ப னையில் &lsquo;அயோத்தி&rsquo; என்று எழுதிப் பார்த்தார். அப்படி நம் சமூகத்தில் பாரதி அவர் காலத்தில் எழுதிய எழுத்துக்களில் சில பொருத்தமாக இல்லாமல் இருந்திரு க்கலாம். அதையும் அவர் தன் வாழ்நா ளிலேயே சரிசெய்து ஒரு உன்னத இடத் திற்கு வந்து மகாகவியாக பரிணாமம் பெற்றிருக்கிறார். பாரதியின் எழுத்துக்களில் இரஷ்ய புரட்சி ஏற்பட்ட சூழலில் முதலில் லெனினை விமர்சித்தார். காரணம் 100 ஆண்டு களுக்கு முன்பு பல்லாயிரம் மைல்கள் தாண்டியுள்ள இரஷ்யாவில் என்ன நடக்கிறது என்ற செய்தி அறிந்து ஒரு எழுத்தாளர் தனக்குத் தோன்றியதை எழுதி னார். ஆனால், அதன் பின் இரஷ்ய சூழலை தீர விசாரித்து அதே லெனினை, தன் இறுதிக் காலம் வரை போற்றிப் புகழ்ந்தார் பாரதி. சோவியத், போல்ஷ்விக் போன்ற சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை தன் வாழ்நாளிலேயே உருவாக்கிப் பார்த்தார். சொந்த சாதியாலேயே ஒதுக்கப்பட்டவர் பாரதி பாவேந்தரை, பாரதி முதன் முதலில் &nbsp;பார்த்தது ஒரு ஆன்மீக கதாகாலஷேப நிகழ்ச்சியில் தான். தொடக்கத்தில் பாவேந்தர் முழு ஆன்மீக வாதியாகத்தான் தன் படைப்புகளை முன் வைத்தார். ஆனால் அதை வைத்துப் பாவேந்தரை இன்றைக்கு மதிப்பிட முடியுமா? தன்னை பாரதிதாசன் என்று அறிவித்துக் கொண்ட பாவேந்தரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் இவர்கள், பாரதியை மட்டும் விமர்சிப்பது என்பது &nbsp;பாரதியை காலவரிசையோடு பொருத்திப் பார்க்காததன் வெளிப்பாடு ஆகும். பாரதி &nbsp;வாழ்ந்த காலத்தில் சொந்த சாதியால் ஒதுக்கப்பட்டவர். ஆனால் இன்று அவர் &nbsp;பிறந்த சாதியை மட்டும் வைத்துக் கொண்டு அவர் மீது வன்மம் காட்டுவதும் பிறப்பின் அடிப்படையிலான பேதமே ஆகும். பொய்யை விட பாதி உண்மை ஆபத்தானது &nbsp;பொய்யை விட மிகவும் ஆபத்தானது பாதி உண்மை. பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல. &nbsp;வலதுசாரிகள் எல்லா ஆளுமை களையும் தங்களுக்குள் ஆலிங்கனம் செய்து தனதாக்கிக் கொள்ளும் காலம் இது. &nbsp;இந்தச் சூழலில் இதுபோன்ற உரையாடல் கள் நம்முடைய கருத்தியலுக்கு வலு சேர்க்கும் பாரதியைப் போன்ற ஆளுமை களை வலிந்து வலதுசாரிகள் கையில் கொடுக்கும் செயலாகும். பாசிச எதிர்ப்பை பலவீனப்படுத்திவிடக் கூடாது சமகாலச் சிக்கல்கள் குறித்துப் பேசா மல், அதை மைய அரசியலாக கொண்டு வராமல் வலதுசாரிகள் எப்படி திசை திருப்பும் வேலையை செய்கிறார்களோ, அதே விளையாட்டை பெரியாரியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் செய்வது விபரீதமானது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எந்தவித செயல்தந்திரமும் இல்லாமல் தமிழ்ச் சமூகத்தின் ஆளுமைகளின் ஒட்டுமொத்த பங்களிப்பை மதிப்பீடு செய்யாமல் அவர்களிடம் உள்ள சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்துவது பாசிச எதிர்ப்பை பலவீனப்படுத்தவே செய்யும். சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக் கூடாது. வலதுசாரிகளின் வெறுப்பு அரசிய லால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத் தில், முற்போக்காளர்கள் முகாமி லிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இவை களை உடனே தடுப்பது, தவிர்ப்பது காலத்தின் தேவை ஆகும். &nbsp;இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.