தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர் பாதிப்பு கணக்கீடு செய்ய செயலி முறை சாத்தியமில்லை

6 Dec 2025, 6:20 pm
பயிர் பாதிப்பு கணக்கீடு செய்ய செயலி முறை சாத்தியமில்லை

பயிர் பாதிப்பு கணக்கீடு செய்ய செயலி முறை சாத்தியமில்லை

திருவாரூர் ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் மனு திருவாரூர், டிச.6 - பயிர் பாதிப்பு கணக்கீடு செய்ய செயலி  முறை தற்போதைய நிலையில் சாத்திய மில்லை என விவசாயிகள் சங்கம் தெரிவித் துள்ளது. சிபிஎம், சிபிஐ சார்ந்த தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்  சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்  தலைவர்கள் கே.முருகையன், எஸ்.தம்பு சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் அமைப்பின் மாவட்டச் செய லாளர்கள் கே.ஆர்.ஜோசப், எம்.சேகர்  ஆகியோர் உரையாற்றினர். திருவாரூர்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கையை  வலியுறுத்தி மனு அளிப்பது. வடகிழக்கு தொடர் மழையினால் சம்பா, தாளடி பயிர்கள்  பாதிப்படைந்து விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். விவசாயிகளை பாது காக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ.35 ஆயி ரம் நிவாரணம் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலி யுறுத்தி டிசம்பர் 11 ஆம் தேதி ஒன்றிய தலை நகரங்களில் சாலை மறியல் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் எஸ். சாமிநாதன், எம்.ஜெயபிரகாஷ், கே.சுப்பிர மணியன், ஜி.பவுன்ராஜ், பி.சௌந்தர்ராசன், டி.தியாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்  வ.மோகனச்சந்திரனை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.  அந்த மனுவில், “வடகிழக்கு பருவ மழை மற்றும் டிட்வா புயலால் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பெருமளவு சம்பா, தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கி  அழுகி வருகின்றன. கடந்த செப்டம்பரிலும் மழை வெள்ள நீர் சூழ்ந்து குறுவை அறுவடை  செய்ய வேண்டிய நிலையில் இருந்த நெல்  கதிர்கள் நீரில் மூழ்கியும் சம்பா, தாளடி இளம் பயிர்களும் பாதித்தன. தற்போது நீரில் மூழ்கிய சம்பா, தாளடி  பயிர்கள் முற்றிலும் அழியும் நிலையில் உள்ளன. வயல்வெளிகள் அனைத்தும் கடல்  போல் உள்ள நிலையில் மறு விதைப்பு மேற் கொள்ள வழியும் இல்லை. இந்நிலையில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடி யாக நிவாரணம் அறிவித்து பாதிப்பை கணக் கெடுக்க அறிவுறுத்தியுள்ள நிலையில் நீரில்  மூழ்கிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 8,000  என்பது விவசாயிகளின் பாதிப்பிற்கு ஏற்ற தாக அமையாது. விவசாயிகள் ஒரு பருவத்தின் மகசூலை  இழந்ததுடன், இதுவரை செய்த செலவு தொகையையும் இழந்துள்ளனர். எனவே காப்பீடு திட்டத்தின் மூலம் பேரிடர் பாதிப்பில்  அழியும் நெல் இளம் பயிர்களுக்கு வழங்க  வாய்ப்புள்ள தொகையையும் சேர்த்து  பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக் கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்க  வேண்டும். மனித உயிரிழப்பிற்கு ரூ.10 லட்சம் வழங்க  வேண்டும். கால்நடைகள் இழப்பு, குடி யிருப்புகள் பாதிப்பிற்கும் உரிய நிவாரணம்  வேண்டும். டிச.8 ஆம் தேதிக்குள் கணக் கெடுத்து நிவாரணம் வழங்கப்படும் என்ற வேளாண்துறை அமைச்சரின் அறிவிப்பு வர வேற்கத்தக்கது. ஆனால் பயிர் பாதிப்பு கணக்கீடு செய்ய செயலி முறை தற்போ தைய நிலையில் சாத்தியமில்லை. செயலி முறையால் குத்தகை நிலம், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர் களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போகும்.  எனவே, செயலி முறையை ரத்து செய்து வழக்கமான முறையில் பாதிப்பை பார்வை யிட்டு கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வேண்டுமென” தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.