தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நோய் நெருக்கடிகளின் முழு உண்மையை மக்களுக்குச் சொல்வது அவசியம்

10 Nov 2025, 5:08 pm
நோய் நெருக்கடிகளின் முழு உண்மையை மக்களுக்குச் சொல்வது அவசியம்
<p><strong>நோய் நெருக்கடிகளின் முழு உண்மையை மக்களுக்குச் சொல்வது அவசியம்</strong></p> <p>மருத்துவக் கருத்தரங்கில் வலியுறுத்தல் சென்னை, நவ.10&ndash; &ldquo;மருத்துவர்கள் அடிப்படையில் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் சமூகம் நோய்வாய்ப்பட்டிருக்கிறது&rdquo; என்று சூழலியல் கருத்தரங்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. சூழல் நிலை, உயிர் வாழ்வு, உணவு உரிமை &ndash; இவை மூன்றும் வெவ் வேறாகத் தெரிந்தாலும், உண்மை யில் ஒன்றுக்கொன்று நெருங்கிப் பிணைந்திருப்பவை. இதைப் பற்றிய அடிப்படையான புரிதலை ஏற்படுத்துவதாக சென்னையில் ஞாயிறன்று (நவ.9) மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது. டாக்டர் கோபிகர் &nbsp;ஹோமியோபதி &nbsp; அறக்கட்டளை இதை நடத்தியது. &lsquo;சூழல் &ndash; உயிர் &ndash; உணவு பாதுகாப்பில் ஹோமியோபதி மருத்துவம்&rsquo; என்ற இந்தக் கருத்தரங்கம் பன்முகக் கோணங்களில் சிந்தனைகளை முன்வைத்தது. &lsquo;சுற்றுச் சூழலும் மக்கள் மருத்துவமும்&rsquo; என்ற தலைப்பில் உரையாற்றிய எழுத்தாளர் நக்கீரன், &ldquo;உணவு நஞ்சாவது பற்றி அறி வோம். ஆனால் இன்று மருந்தும் நஞ்சாகிற நிலைமை ஏற்பட்டி ருக்கிறது&rdquo; என்றார். ஹோமியோபதி மருத்துவமுறையின் தந்தை என போற்றப்படும் டாக்டர் ஹானிமன், தன் உடலில் தானே நோய்களை வர வழைத்துக்கொண்டு தனது மருந்து களின் செயல் திறனையும், உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அனுபவப் பூர்வமாகப் பதிவு செய்து அறிக்கை களை அளித்தார். பெரும் மருந்து நிறுவனங்களோ, மூன்றாம் உலக நாடுகளின் ஏழை எளிய மக்களைத் தங்களது தயாரிப்புகளுக்கான சோதனை உயிரிகளாகக் கையாளு கின்றன&rdquo; என்றார் அவர். கொரோனா ஆதிக்கம் செலுத்திய ஆண்டுகளில், அதனால் ஏற்பட்டதை விட சூழ லியல் சீர்குலைவுகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளே அதிகம். ஒரு சத வீதம் காடு அழிக்கப்படுகிறபோது, 8 சதவீதம் கொசுக்கள் நாட்டுக் குள் வருகின்றன என்று சூழலிய லாளருமான அவர் குறிப்பிட்டார். &lsquo;உடல் நலத்தில் நுண்ணுயிர் களும் அவற்றுக்கான உணவுகளும்&rsquo; என்ற தலைப்பில் உரையாற்றினார் மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில் நுட்பக் கல்லூரியின் கல்வி யியல் தலைவர் முனைவர் உஷா ஆண்டனி. &ldquo;சூழலின் அங்கம் தான் நாம். நுண்ணுயிர்களும் அப்படித்தான். குடலுக்குள் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிப்பதற்கான மருந்துகளை உட்கொள்கிறபோது நன்மை யளிக்கும் நுண்ணுயிர்களையும் கொன்றுவிடுகிறோம்&rdquo; என்ற எச்சரிக்கையை அவர் விடுத்தார். &ldquo;நாம் பயன்படுத்தும் உணவு &nbsp;இறுதியாக உடலின் இயற்கை யான வளர்சிதை மாற்றத்திற்குப் பங்களிப்பதாக இருக்க வேண்டும். இயற்கை அமைப்பிலேயே அந்தந்த வட்டாரம் சார்ந்து கிடைக் கிற கனிகள் சுவையானவையாக வும், இந்த வளர்சிதை மாற்றத் திற்கு உதவக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஆனால் பலர் அவற்றை உண்பதில்லை. கேப்பைக் கூழ், கம்மங்கூழ் உள்ளிட்ட கூழ்வகைகளில் பெரும்பாலும் ஊட்டம் மிகுந்த சிறுதானியங்களே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் நன்மையளிக்கும் நுண்ணுயிர்கள் வளர்வதற்கான சத்துகள் வளமாக இருக்கின்றன. அதே வேளையில் &nbsp;ஒரே மாதிரியாக இல்லாமல் பல்வேறு வகையான உணவுகளை எடுத்துக்கொள்வதும் தேவைதான்,&rdquo; என்றார் அவர். சில குறிப்பிட்ட மருந்துகள் செயல்படும் விதத்தை விளக்கினார் இந்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமத்தின் மாநிலச் செயலாளர் மருத்துவர் பாலமுருகன். &lsquo;மருந் தென வேண்டும் ஹோமியோபதி&rsquo; என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், எந்தவொரு மருத்துவமுறை யையும் அறிவியல் பார்வையுடன் அணுகுவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். சமுதாயங்கள் எதிர்கொண்ட பல சிக்கலான நோய்க்காலங்களில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஹோமியோபதி மருந்துகள் வெற்றி கரமாகப் பங்காற்றியிருக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிப்புகளுக்கு உள்ளாகும் விலங்குகளுக்கும் தாவரங்களு க்கும் சிகிச்சை அளிப்பதில் கூட ஹோமியோபதி சிறப்பாகப் பயன்படுகிறது என்ற தகவலையும் தெரிவித்தார். மருத்துவர் ஜெகதா, நிறையக் குழந்தைகள் பிறப்பதால் அவர்கள் வெளியேற்றும் கரிம வாயு உள்ளிட்டவற்றால் சூழல் மாசுபடுகிறது. ஆகவே குழந்தை பெற்றுக்கொள்ளாதீர்கள் என்ற விபரீதமான கருத்துகளை சிலர் பரப்புவது பற்றி எச்சரித்தார். தலைமை தாங்கிய மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், &ldquo;விவசாயத் தொழிலாளர்கள் பலருக்கு சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதற்குக் காரணம் அவர்கள் பல &nbsp;மணி நேரம் வெய்யிலில், போது மான குடிநீர் பருகாமல் உழைப்பது தான் என்று எளிதாகச் சொல்லப்படு கிறது. பல்வேறு வழிகளில் அவர்களுடைய அன்றாட உணவில் கலந்துவிட்ட நச்சுப் பொருள்கள் அதற்குக் காரணமில்லையா?&rdquo; என்ற கேள்வியை எழுப்பினார். அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான அவர், &ldquo;மகாபா ரதத்தில் போர்க்களத்தில் துரோ ணரை வீழ்த்துவதற்காக &lsquo;அஸ்வத்தா மன் இறந்துவிட்டான்&rsquo; என்று, அவருடைய மகன் இறந்துவிட்டது போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் விதத்தில் உரக்கக் கூறப்படும். ஆனால் யாருக்கும் கேட்காத சன்ன மான குரலில் அஸ்வத்தாமன் என்ற &nbsp;யானை கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும். அது போலத்தான் பல மருத்துவ நெருக்கடிகளின் போது பகுதி உண்மைகளை மட்டுமே அரசுகள் சொல்கின்றன. முழு உண்மைகளையும் மக்களுடைய கவனத்திற்குக் கொண்டுவருகிற பொறுப்பு மருத்துவர்களுக்கும் இயக்கங்களுக்கும் சமூகச் செயல் &nbsp;பாட்டாளர்களுக்கும் இருக்கிறது&rdquo; என்றார். சிறப்பு விருந்தினராக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை முன்னாள் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் கலந்துகொண்டார். மருத்துவ மாணவர்களும் பல்வேறு களப் பணியாளர்களும் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.