ஸ்கேன் இந்தியா
2 Jan 2026, 3:33 pm

ஸ்கேன் இந்தியா

அங்கலாய்ப்பு “

அமிலம் கலந்த தண்ணீராக மாறியிருக் கிறது” என்று இரண்டு மாதங்களுக்கு முன் பாகவே மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரின் பாகிரத்புரா பகுதி மக்கள் புகார் தெரிவித்திருக் கிறார்கள். மாநகராட்சி மேயரின் உதவித் தொலைபேசி எண்ணிலும் பதிவு செய்துள்ளனர். ஆனால், புதிய நர்மதா திட்டத்தின் குழாய் களை மாற்றுவதில் மாநகராட்சி கவனம் செலுத்தி கொண்டிருந்தது. தண்ணீரை அருந்தியதால் ஒரு குழந்தை உட்பட 11 பேர் மரணமடைந்துள்ளனர். 1,400க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிப்புக்குள்ளாகினர். பரிசோதனை முடிவு களும் நீரில் அமிலம் கலந்திருந்ததை உறுதி செய் திருக்கிறது. சம்பவம் நடந்தபிறகும் கூட மேயரும், அப்பகுதி கவுன்சிலரும் விழாக்களில் பங்கெடுப்பதில் முனைந்து நின்றனர். நிர்வாகத்தில் எத்தனை என்ஜின் என்பது முக்கியமல்ல. ஓட்டு பவர்கள் சரியாக இருக்க வேண்டும் என்கிறார் கள் அப்பகுதி மக்கள். இத்தனைக்கும் இந்தியா விலேயே இதுதான் சுத்தமான நகரமாகும் என்று அங்கலாய்க்கிறார்கள்.

எகிறும் போதை

சுமார் 6 லட்சம் லிட்டர் மதுபானத்தை ஒடிசா வில் குடித்துத் தீர்த்திருக்கிறார்கள். புத் தாண்டுக் கொண்டாட்டங்களின்போது இந்த அளவுக்கு விற்பனை ஆகியிருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, மதுபானங்களை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. வெளிநாட்டு மதுபானங்களை அதிகம் விரும்பி எடுத்துக் கொள்கிறார்கள். சமூக ஆர்வலர்களோ, “இது வெறும் அதிகாரப்பூர்வ மாக விற்பனை செய்யப்பட்ட கணக்குதான். கள்ளச்சந்தை மற்றும் சட்டவிரோதமாக காய்ச்சப் படும் சாராயம் உள்ளிட்டவையும் பெரிய அள வில் புழங்கியிருக்கிறது. இது வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை அல்ல என்பதை ஆட்சி யாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்கள். அதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் எகிறி யிருக்கிறது. வாகனப் பரிசோதனைகளின்போது ஆங்காங்கே போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றப்பின்னணி

கிரிமினல்களைத் தேர்தலில் நிறுத்துவதா என்று ஒன்றிய அமைச்சர் முரளிதர் மொஹோல் கூட்டணிக் கட்சி மீது பாய்ந்துள் ளார். மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில், புனே மாநகராட்சியில் ஆளும் கூட்டணிக்கட்சி கள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் கிரிமினல்கள் இடம் பெற்றுள்ளனர். அதை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மொஹோல் கூறியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில், பாஜகவிலும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கிறார்களே என்று கேட்டபோது, அந்தப் பின்னணி பற்றி எனக்குத் தெரியாது என்றிருக்கிறார். பாஜக வேட்பாளர்கள் பற்றி நாங்கள் கூறினால், பட்டியலைப் படிக்கவே நிறைய நேரம் எடுக்குமே என்று அஜித் பவார் கட்சியினர் கிண்டலடிக்கிறார்கள்.

விடுப்பு

அசாமின் தேஜ்பூர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சம்புநாத் சிங், ஒரு வழியாக விடுப்பு தரப்பட்டு அனுப்பப்பட்டிருக் கிறார். பெரும் அளவில் நிதி முறைகேடுகள் பல் கலைக்கழக நிர்வாகத்தில் நடந்திருக்கின்றன. ஆளும் பாஜகவின் அரவணைப்பில் இருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மாண வர்களும், ஊழியர்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர் மீது நட வடிக்கை எடுக்க மறுத்து வந்தனர். இந்திய மாண வர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்தது. மேலும், நடப்பா ண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைச் சரி செய்ய வேண்டிய கட்டாயமும் பாஜகவுக்கு ஏற்பட்டது. ஒரு குழுவைப் போட்டு, அவரை விடுப்பில் அனுப்பி விட்டார்கள். தேர்தல் முடிவு வரையில் இக்குழுவை வைத்து விளையாட்டுக் காட்ட பாஜக திட்டமிட்டுள்ளது என்கிறார்கள் போராடும் அமைப்பினர்.