தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட
17 Mar 2026, 3:26 pm
<p>தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்கு உட்பட்ட வளையப்பேட்டை பைபாஸ் சாலையில், நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் சிவபிரகாசம் தலைமையில், வாகனத் தணிக்கை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக காரில் வந்த பண்டாரவாடை, திருமஞ்சண வீதியைச் சேர்ந்த சாகித் என்பவர், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்து, பாபநாசம் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனர். பறி முதல் செய்யப்பட்ட பணம் சீலிடப்பட்டு, பாபநாசம் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.</p>
