தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திமுகவிற்கு சாதகமாகிறது!

30 Mar 2026, 3:40 pm
          திமுகவிற்கு  சாதகமாகிறது!
<p><strong>திமுகவிற்கு &nbsp;சாதகமாகிறது!</strong></p> <p>கோவை மாவட்டத்தின் சிட்கோ தொழில்பேட்டைகள், பிரம்மாண்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் செழுமையான விவசாய பூமியைக் கொண்ட கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, 2026 தேர்தலில் ஒரு வரலாற்று மாற்றத்தை எதிர்நோக்கி நிற்கிறது. 1967 முதல் நடந்த 13 தேர்தல்களில் 9 முறை வெற்றி பெற்று, இத்தொகுதியைத் தனது அசைக்க முடியாத கோட்டையாக வைத்திருந்தது அதிமுக. ஆனால், இந்த முறை அந்தக் கோட்டையின் மதில் சுவர்களில் விரிசல் விழத் தொடங்கியுள்ளது. &rsquo;உள்ளடி&rsquo; வேலைக்குத் தயார்! கடந்த முறை வெறும் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றி பெற்ற அதிமுக, இந்த முறையும் பழைய முகமான தாமோதரனையே வேட்பாளராக அறிவித்துள்ளது. இது தொகுதி மக்களிடையே மட்டுமன்றி, கூட்டணிக் கட்சியான பாஜகவினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. &rdquo;இந்தத் தொகுதி எங்களுக்குத்தான் வேண்டும்&rdquo; என ஒற்றைக்காலில் நின்ற பாஜகவினர், அதிமுகவின் பிடிவாதத்தால் கடும் கோபத்தில் உள்ளனர். தொகுதிக்குள் பாஜகவினர் மறைமுகமாக &rsquo;உள்ளடி&rsquo; வேலைகளில் ஈடுபடத் தயாராகிவிட்டதாகக் கசியும் தகவல்கள், அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பெருமளவில் கேள்விக்குறியாக்கியுள்ளன. திறப்பு விழா அரசியல்! நான்கு முறை இத்தொகுதியின் பிரதிநிதியாக இருந்தும், மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க தாமோதரன் அவர்கள் தவறிவிட்டார் என்பதே தொகுதி மக்களின் பிரதான குற்றச்சாட்டு. &rdquo;அவ்வப்போது நடக்கும் திறப்பு விழாக்களுக்கு மட்டுமே தலைகாட்டுகிறார்; மக்கள் பிரச்சினைகளை நேரில் வந்து கேட்பதில்லை&rdquo; என வாக்காளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தொழில்பேட்டைகளின் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை சீரமைப்பு மற்றும் ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி மேம்பாலக் கோரிக்கைகள் இன்னும் காகித அளவிலேயே உள்ளன. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு கிணத்துக்கடவு தொகுதியின் மிகப்பெரிய தீராத தலைவலி வெள்ளலூர் குப்பைக்கிடங்கு. கடந்த 20 ஆண்டுகளாக நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலைச் சீரழித்து வரும் இந்தக் கிடங்கை அகற்ற பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும், அது இன்னும் மாற்றப்படாமல் இருப்பது மக்களின் பெரும் கொதிப்பிற்கு காரணமாகியுள்ளது. இந்த போராட்டக் களத்தில் அதிமுகவின் மௌனம் அவர்களுக்கு பின்னடைவாக மாறியுள்ளது. இளம் வேட்பாளர்: அதிகரிக்குமா செல்வாக்கு? கடந்த இரண்டு தேர்தல்களாக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்ட திமுக, இந்த முறை சபரி கார்த்திகேயன் என்ற இளம் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. இது தொகுதியின் பெரும்பான்மையாக உள்ள இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சார்ந்த வாக்காளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டித் திட்டம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு திட்டங்கள் இத்தொகுதியில் அதிக பயனாளிகளைக் கொண்டுள்ளது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல், சிதறும் வாக்குகளை திமுக பக்கம் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 ஆண்டு கால அதிமுக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புதிய உத்வேகத்துடன் தொகுதியை மேம்படுத்த மக்கள் விரும்பு கின்றனர். கிணத்துக்கடவு என்பது வெறும் விவசாய பூமி மட்டுமல்ல, அது கோவையின் பொருளாதார இன்ஜின். அந்த இன்ஜின் சீராக இயங்க புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என வாக்காளர்கள் கருதுகின்றனர். அதிமுகவின் உட்கட்சிப் பூசலும், பாஜகவின் உள்ளடி வேலைகளும் ஒருபுறம் இருக்க, திமுகவின் ஒருங்கிணைந்த தேர்தல் வேலைகள் இம்முறை &rsquo;கிணத்துக்கடவு கோட்டையை&rsquo; வசப்படுத்தும் என்றே அரசியல் &nbsp;நோக்கர்கள் கணிக்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.