பழங்குடி மக்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>பழங்குடி மக்களுக்கு நலவாரிய அட்டை வழங்கல்</strong></p>
<p>திருவண்ணாமலை,பிப்.17- வந்தவாசி தாலுகா மழையூர், கீழ்வெள்ளூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.சரவணன் அட்டைகளை வழங்கினார். இதில் ஆய்வாளர் தேவன், சிபிஎம் வட்டாரச் செயலாளர் அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.</p>
