46 மலைவாழ் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கல்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>46 மலைவாழ் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கல்</strong></p>
<p>பொள்ளாச்சி, நவ.14- நவமலை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு, இலவச வீட்டுமனைப்பட்டாகள் வழங்கப்பட் டன. கோவை மாவட்டம், ஆழியாறு அணையின் பின்புறத்தில், ஆழியாறு துணை மின்நிலையத்தை ஒட்டி, அடர்ந்த மலைகள் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது நவமலை கிராமம். காலம் காலமாக இங்கு வாழும் பழங் குடி மக்களுக்கு பட்டா தரவில்லை. நிரந் தர வீடுகள் இல்லாததால், ஒழுகும் ஓலைக்குடிசைகளில் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பாது காக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், அப்பகுதியில் பட்டா மறுக்கப்பட்டு வந் தது. ஆனால் பல நூறு ஏக்கர் நிலத்துக்கு பட்டா பெற்று தனியார் தோட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்நி லையில், நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த 46 மலை வாழ் மக்களுக்கு ரூ.4.87 லட்சம் மதிப் பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங் கும் நிகழ்ச்சி வெள்ளியன்று நடை பெற்றது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ் வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பட்டாக்களை வழங்கினார். இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் க.ஈஸ்வரசாமி முன்னிலை வகித் தார். இதில் நகர்மன்றத் தலைவர் சியாமளா உட்பட திரளானோர் பங் கேற்றனர்.</p>
