வீட்டுமனைப்பட்டா வழங்கல்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>வீட்டுமனைப்பட்டா வழங்கல்</strong></p>
<p>திருப்பூர், நவ.14- காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.34 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் மற்றும் வரு வாய்த் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட் டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். மேலும், காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட வீரணம்பா ளையம், படியூர், சிவன்மலை, ஆரத்தொழுவு, வெள்ளகோ வில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 384 பயனாளிக ளுக்கு வருவாய்த் துறையின் சார்பில் ரூ21.78 லட்சம் மதிப்பீட் டில் வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். தாராபுரம் வரு வாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் பத்மநாபன் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
