750 சீருடைப் பணியாளர்கள் பணி நியமன ஆணை வழங்கல்
3 Jan 2026, 2:20 pm
<p><strong>750 சீருடைப் பணியாளர்கள் பணி நியமன ஆணை வழங்கல்</strong></p>
<p>சென்னை, ஜன.3 - தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் மூலம் 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட னர். இவர்களுக்கு பணி நியமன ஆணை கள் வழங்கும் விழா சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூல கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கி வாழ்த்தினார். மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரி யத்தால் தேர்வான 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் பணி நியமனஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். கோவில்கள் மற்றும் பிற திட்டங்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக பல்வேறு திட்டப் பணி களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.108.90 கோடியில் 11 கோவில்களில் 18 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.15.30 கோடியில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத் தார். 6 சரக ஆய்வாளர் அலுவலகங்கள், 3 சிற்றுந்துகளை காணொலி வாயிலாக முத லமைச்சர் தொடங்கி வைத்தார். கதர்த்துறை சார்பில் 2024-25-இல் தேர்வு செய்யப்பட்ட 13 பேருக்கு விருது, காசோ லையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 8 பேருக்கு சிறந்த நெசவாளர் விருது மற்றும் ரூ.20 லட்சத்தை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2 பேருக்கு சிறந்த வடிவமைப்பாளர் விருது டன் ரூ.1.50 லட்சம் காசோலையும் வழங்கி னார். 3 பேருக்கு இளம் வடிவமைப்பாளர் விருதுடன் ரூ.2.25 லட்சம் காசோலையும் முத லமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலா ளர் ந.முருகானந்தம், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
