தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி

1 Jul 2026, 10:52 pm
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி
<p><strong>மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி</strong></p><p> திருநெல்வேலி ஜூலை 1- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தனது செமி-கிரையோஜெனிக் இன்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகல் (PHTA) சோதனையை 175 டன் உந்துவிசைத் திறனுடன் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த முக்கிய ஹாட் டெஸ்ட் கடந்த ஜூன் 24-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ ப்ரோபல்ஷன் காம்ப்ளக்ஸ் (IPRC) வளாகத்தில் நடைபெற்றது. அதிக உந்துவிசை நிலைகளில் இன்ஜினின் நிலையான செயல்பாட்டை நிரூபிப்பதும் இச்சோதனையின் முக்கிய நோக்கமாக இருந்தது. முன்னதாக நடைபெற்ற PHTA சோதனைகள் 47 சதவீதம் (94 டன்) மற்றும் 60 சதவீதம் (120 டன்) உந்துவிசை நிலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்தன. தற்போதைய சோதனையில் முதன்முறையாக 88 சதவீத உந்துவிசைத் திறனான 175 டன் அளவில் வெற்றிகரமாக இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. திட்டமிட்டபடி நடைபெற்ற இந்த சோதனையில் அனைத்து இன்ஜன் அளவுருக்களும் எதிர்பார்த்தபடி துல்லியமாக செயல்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்த வெற்றியின் மூலம் அடுத்த கட்டமாக 100 சதவீத உந்துவிசைத் திறனான 200 டன் அளவில் செமி-கிரையோஜெனிக் இன்ஜினை இயக்குவதற்கான நம்பிக்கையை இஸ்ரோ விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். தற்போது எல்.வி.எம்.3 ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் L110 கோர் ஸ்டேஜுக்கு மாற்றாக, 2000 கிலோநியூட்டன் திறன் கொண்ட SE2000 இன்ஜின் மூலம் இயங்கும் செமி-கிரையோஜெனிக் ப்ரோபல்ஷன் ஸ்டேஜ் (SC120) உருவாக்கப்பட்டு வருகிறது.இந்த அமைப்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நச்சுத்தன்மையற்ற திரவ ஆக்ஸிஜன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யான இஸ்ரோசின் ஆகியவை எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் எல்.வி.எம்.3 ராக்கெட்டின் செயல்திறன் மற்றும் விண்வெளிக்கு சுமந்து செல்லும் பயன்சுமை திறன் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.