இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா
16 Jul 2026, 9:10 pm

இஸ்ரோவில் ஒரே ஆண்டில் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா

புதுதில்லி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட் டது. அந்த அறிக்கையில்,“நடப் பாண்டில் 1,050 புதிய அறிவியல் மற்றும் நிர்வாகப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது” என இஸ்ரோ கூறியது.

இந்த அறிக்கை வெளியான சில நாட்களில் இஸ்ரோ வில் முக்கிய விஞ்ஞானிகள் அடுத்த டுத்து ராஜினாமா செய்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வெளி யாகியுள்ளன.

இதுதொடர்பாக இஸ்ரோ தரப்பில் இருந்து வெளியான அறிக்கையின்படி, இஸ்ரோவிலிருந்து கடந்த சில மாதங்க ளில் மட்டுமே 100 முதல் 120 விஞ்ஞானி கள் வரை அடுத்தடுத்து விலகியுள்ள னர்.

இஸ்ரோவில் தற்போது 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்ற னர். அதனால் இந்த எண்ணிக்கையு டன் ஒப்பிடும்போது, ராஜினாமாக்க ளின் எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம்.

மிக முக்கியமானவர்கள் ஆனால் ராஜினாமா செய்தவர்கள் அனைவரும் ககன்யான், சந்திரயான் உள்ளிட்ட திட்டங்களில் முக்கியமான பங்காற்றியவர்கள். இஸ்ரோவின் மிகப் பெரிய மையமான விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் மட்டும் சுமார் 20 விஞ்ஞானிகள் விலகியுள்ளனர். இதில் இந்தியாவின் எல்விஎம் 3 ராக் கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப் பும் அடங்குவார்.

அதே போல யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இங்கிருந்து சுமார் 80 விஞ்ஞானிகள் வரை ராஜினாமா செய்துள்ளனர். இதில் விண்வெளித் துறைக்கான ‘ஸ்பாடெ க்ஸ்’ திட்ட இயக்குநர் மற்றும் ‘சந்திர யான் 3’ திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த இளம் விஞ்ஞானிகளும் அடங்குவர்.

‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவில் இறங்குவதை கண்காணிக்கும் குழு வின் திட்ட மேலாளராக இருந்த ஆதித்யா ரல்லபள்ளி என்பவரும் ராஜி னாமா செய்துள்ளார்.

இவர் தான் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு விண்கலம் தரையிறங்குவதை உறுதி செய்தவர். புதிய விதி விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் விலகலால் நாட்டின் கவுரவமிக்க விண் வெளித் திட்டங்கள் பாதிக்கப்படுவ தைத் தடுக்க இஸ்ரோ, ராஜினாமா விதி களை மாற்றியமைத்துள்ளது.

அதன் படி, ககன்யான் உள்ளிட்ட தேசிய முக்கி யத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணி யாற்றும் ‘குரூப் ஏ’ விஞ்ஞானிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோ ரிக்கைகளை இனிமேல் வழக்கமான முறையில் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்க ளை ஏற்கும் அதிகாரம் இஸ்ரோவின் அந்தந்த மையங்களின் இயக்குநர்க ளுக்கே வழங்கப்பட்டிருந்த சூழலில், இனி அந்த அதிகாரம் பறிக்கப் பட்டு, அனைத்து ராஜினாமா விண்ணப் பங்களும் விண்வெளித் துறையின் இறுதி முடிவுக்கே அனுப்பப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட திட்டங்கள் முடியும் வரை இயக்குநர்கள் இவர்களின் ராஜி னாமாவை ஏற்கக் கூடாது என இஸ்ரோ உத்தரவிட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரோ திறம்படச் செய்து வருகிறது இந்தத் தொடர் விலகல்கள் குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறுகையில்,”விஞ்ஞானிகள் விலகு வது என்பது எந்தவொரு நிறுவனத்தி லும் நடக்கும் இயல்பான ஒன்றுதான்.

ஆனால், முக்கியத் திட்டங்கள் இதனால் திடீரெனப் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது வில கினாலும், அவர்களுக்குப் பதிலாக வேறு நபர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள் வார். இதற்கான மாற்று ஏற்பாடுகளை இஸ்ரோ திறம்படச் செய்து வரு கிறது” என்று கூறியுள்ளார்.