தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் ராஜினாமா: தேசப் பாதுகாப்பின் மௌனக் கேள்வி! - ஆர்.பத்ரி

18 Jul 2026, 9:00 pm
இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் ராஜினாமா: தேசப் பாதுகாப்பின் மௌனக் கேள்வி! - ஆர்.பத்ரி

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தொடர் ராஜினாமா: தேசப் பாதுகாப்பின் மௌனக் கேள்வி! - ஆர்.பத்ரி

இந்திய விண் வெளி ஆரா ய்ச்சி நிறுவ னமான இஸ்ரோவிலி ருந்து கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 120 முக்கிய விஞ் ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா செய்து வெளியேறியுள்ளது இந்தியாவின் அறிவியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் பக்கம். ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டங்களில் பணியாற்றிய விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC), யு. ஆர். ராவ் செயற்கைக்கோள் மையம் (URSC) உள்ளிட்ட மிக முக்கியமான மையங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைமை விஞ்ஞானிகள் இந்த வெளி யேற்றத்தில் அடங்குவர்.

மர்மமான வெளியேற்றம்: பின்னணியில் என்ன?

எல் வி எம் 3 (LVM3) திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநர் ஆதித்யா ரல்லபள்ளி உள்ளிட்ட முதல்நிலை விஞ்ஞானிகளின் இந்தத் தொடர் ராஜினாமா, தன்னிச்சையானது அல்ல. இதற்குப் பின்னால் ஏதேனும் அரசி யல் அழுத்தங்கள் அல்லது கொள்கை முடி வுகள் உள்ளனவா என்ற வலுவான சந்தே கம் எழுகிறது. இந்த வெளியேற்றங்கள் நிகழ்ந்த பின்னரே, ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதற்கு முந்தைய கெடுபிடிகளைக் கடுமையாக்கும் புதிய விதிகளை ஒன்றிய அரசு அவசரகதியில் உருவாக்கியுள்ளது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையா அல்லது உண்மையான பாதுகாப்பு அக்கறையா என்ற கேள்வியை மக்கள் முன் எழுப்ப வேண்டியுள்ளது.

கார்ப்பரேட் மயம்: தொழில்நுட்பத்தின் ஆபத்தான பாதை

இந்த வெளியேற்றங்களை வெறும் தனிப்பட்ட முடிவாகப் பார்க்க முடியாது. இதற்குப் பின்னால் இருக்கும் ‘நுண்ணர சியலை’ நாம் கவனிக்க வேண்டும்:

1. அதானி குழுமத்திற்குத் தொழில்நுட்பக் கைமாற்றம்: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பத்தை அதானி குழுமத்திற்கு வழங்கும் அரசின் முடி வுக்கும், இந்த விஞ்ஞானிகளின் வெளி யேற்றத்திற்கும் நேரடித் தொடர்புள்ள தா? பொதுத்துறை நிறுவனமான இஸ் ரோவின் உழைப்பை, தனியாருக்குத் தாரை வார்க்கும் அரசின் கொள்கை, விஞ்ஞானிகளின் பணிச்சூழலைச் சிதைக்கிறதா?

2.ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) வருகை: இந்தியாவின் வான்வெளியில் தனி யார் செயற்கைக்கோள்களை ஏவ எலான் மஸ்க்கின் நிறுவனத்திற்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் விண்வெளி சந்தையை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடு க்கும் அதே நேரத்தில், நமது நாட்டின் தலைசிறந்த மூளைகள் வெளியேறுவது ஒரு தற்செயல் நிகழ்வு தானா?

தேசப் பாதுகாப்பின் நிலை என்ன? “

வலுவான அரசு” என்று கட்டமைக் கப்படும் பிம்பத்திற்கும், நாட்டின் உயர் தொ ழில்நுட்பக் கட்டமைப்புகள் கார்ப்பரேட்டு களுக்குத் தாரை வார்க்கப்படுவதற்கும் இடையில் ஏதோ ஒரு முடிச்சு உள்ளது. இந்தி யாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உயர் அறிவியல் தொழில்நுட்பத்தின் எதிர் காலம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது. மக்களின் வரிப்பணத்தில் உருவான இந்தி யாவின் விண்வெளித் தொழில்நுட்பம், நாட்டின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப் பட வேண்டுமே தவிர, சில கார்ப்பரேட் நிறு வனங்களின் லாபத்திற்காகப் பயன் படக்கூடாது.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அர சாங்கம் மௌனம் காப்பது கண்டிக்கத் தக்கது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ராஜி னாமா குறித்து அரசு உடனடியாகத் தகுந்த விளக்கமளிக்க வேண்டும். இந்தியாவின் அறிவார்ந்த சொத்துக்களைத் தனியாருக் குத் தாரை வார்க்கும் இந்த ஆபத்தானப் போக்கை முறியடிக்க, மக்கள் விழிப்பு ணர்வு பெறுவதும், ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுப் பதும் இன்றியமையாதது.

இந்தத் தகவலை ஒவ்வொரு இந்திய ரும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; ஏனெ னில், இது வெறும் வேலைவாய்ப்புப் பிரச்சனை அல்ல, இந்தியாவின் எதிர்காலத் தேசப் பாதுகாப்பு தொடர்பான மிக முக்கி யமான விவகாரம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.