தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய விண்வெளித் துறையையும் தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு அடாவடி

26 Jun 2026, 8:03 pm
இந்திய விண்வெளித் துறையையும் தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு அடாவடி

இந்திய விண்வெளித் துறையையும் தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு அடாவடி

புதுதில்லி உலகின் முக்கிய விண்வெளி அமைப் பாக இருப்பது இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்). இது 1969ஆம் ஆண்டு டாக்டர் விக்ரம் சாராபாயால் நிறுவப்பட்டது. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் பேராசிரியர் சதீஷ் தவான் போன்ற முன்னோடி விஞ்ஞானிகளின் அஸ்திவார உழைப்பால் கட்டமைக்கப்பட்டு பிரம்மாண்ட மாக மேம்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இஸ்ரோவையும் தனியா ருக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டமிட்டு, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் முதல்படியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முதன்மை ஏவுகலமான பிஎஸ்எல்வி (PSLV - Polar Satellite Launch Vehicle) ராக்கெட் தொழில்நுட்ப த்தை முழுமையாக உள்நாட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காகத் தகுதியான தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஆர்வ வெளிப்பாட்டு ஆவணம் (Expression of Interest - EOI) கோரப்பட்டுள்ளதாக ‘இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின்’ (IN-SPACe) தலைவர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புளூம்பெர்க் ஊடக நிறு வனத்திற்கு பவன் கோயங்காஅளித்த பேட்டி யில், “தனியார் துறையினருக்குப் பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில்நுட்பத்தை முழுமையாக மாற்றுவதற்கான ஆர்வ வெளிப்பாட்டு ஆவணத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் உள்நாட்டு விண்வெளித் தொழில் துறையின் வளர்ச்சி வேகமெடுக்கும். அதேபோல நாட்டின் ஒட்டுமொத்த செயற்கைக் கோள் ஏவுதல் திறன் கணிசமாக விரிவடையும். இந்த முடிவின் மூலம், இஸ்ரோ புதிய மற்றும் மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளில் அதிக கவனம் செலுத்த முடியும். வழக்கமான ராக்கெட் தயாரிப்பு மற்றும் ஏவுதல் சேவைகளைத் தனி யார் நிறுவனங்கள் தடையின்றி மேற்கொள்ள முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏதேனும் மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் சராசரி ஆண்டு விற்றுமுதல் (Annual Turnover) ரூ.400 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும் அல்லது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு குறைந்தபட்சம் ரூ.1,000 கோடியாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் தனியார் நிறு வனத்திற்குத் தொழில்நுட்பத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளும் வரை, சுமார் 30 மாதங்கள் அல்லது இரண்டு வெற்றிகரமான பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல்கள் வரை இஸ்ரோ தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வழிகாட்டுதல் ஆதரவை வழங்கும்” என அவர் கூறினார்.

இஸ்ரோவின் உழைப்பாளி

பிஎஸ்எல்வி (Polar Satellite Launch Vehicle) என்பது இஸ்ரோவின் மிகவும் நம்பக மான மற்றும் வெற்றிகரமான ஏவுகலங்களில் ஒன்றாகும். இது ‘இஸ்ரோவின் உழைப்பாளி’ என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு ஒரே ஏவுதலில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்ததும் இதே பிஎஸ்எல்வி ராக்கெட் தான். இதுவரை 36 நாடுகளைச் சேர்ந்த 360-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் செயற்கைக் கோள்களைப் பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த சிறப்புமிக்க பிஎஸ்எல்வி-யை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.