கார்ப்பரேட் கொள்ளைக்கு வானமே எல்லை!
yesterday

கார்ப்பரேட் கொள்ளைக்கு வானமே எல்லை!

வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்என்றும், சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்றும் விடுதலை பெற்ற இந்தியா தொடவேண்டிய தூரங்கள் குறித்து கனவு கண்டு பாடினார் மகாகவி பாரதியார். நாடு விடுதலை பெற்றபிறகு பொதுத்துறை நிறுவனமாக இயங்கிய இஸ்ரோ பல்வேறு வியத்தகு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.குறைந்த செலவில் உலக நாடுகளோடு போட்டிப் போடக்கூடிய பல சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.

குறிப்பாக சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியா கண்டறிந்தது. சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவில் தென்துருவப் பகுதியைஆய்வு செய்த நாடாக இந்தியா சாதனை படைத்தது.

செவ்வாய்க் கிரகம் குறித்து பல்வேறு மூடநம்பிக்கைகள் பரப்பப்பட்டிருந்த நிலையில், இஸ்ரோவின் மங்கள்யான் திட்டம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. மிகக்குறைந்த செலவில் நிறைவேற்றப்பட்ட இந்தத் திட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

ஆதித்தியா - எல்-1 திட்டம் மூலம் சூரியக்கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில்இஸ்ரோ இறங்கியுள்ளது. விண்வெளித்துறையில் இஸ்ரோவின் பங்களிப்பால் தகவல், தொழில்நுட்பத்துறையிலும், விவசாயம் மற்றும் தொழில்துறையிலும்ஏராளமான பலன்களை இந்தியா பெற்றது. ஆனால் இந்தியாவின் பொதுத்துறைகள் அனைத்தையும் அழித்தே தீருவதுஎன்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிற நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணிஅரசு விண்வெளி ஆய்வுத்துறையையும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு திறந்து விட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம்தேதி சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தென்துருவத்தில் வெற்றிகரமாக இறங்கிய முதல் நாடு இந்தியா என்பதைக் கொண்டாடும் வகையில் இந்த நாள் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், வின்வெளித்துறையையும் பாஜக கூட்டணி அரசு தனியாருக்கு திறந்துவிட்டுள்ளது குறித்து பூரிப்படைந்துஇந்திய விண்வெளித்துறை காந்தம்போல முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என பெரு முதலாளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் அனுபவங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டதாக செய்திகள் கூறுகின்றன. சேவை மற்றும் இந்திய நலன் என்ற அடிப்படையில் செயல்பட்டு வந்த விண்வெளி ஆய்வுகள் இனிகொள்ளை லாபத்திற்கே பயன்படும்.கிடைக்கும் தரவுகள் தனியார் பெரும் முதலாளிகளின்நலனுக்கே பயன்படுத்தப்படும். நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். பூமியின் வளங்கள்மட்டுமல்ல, வானத்தையும் தனியாருக்கு திறந்துவிட்டுள்ளது மோடி அரசு.கடைசியாக அரசிடம்மிஞ்சப்போவது என்ன என்பதுதான் கேள்வயாக உள்ளது.