என்.வி.எஸ் - 03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய ஜிஎஸ்எல்வி!
31 Oct 2026, 11:46 pm

என்.வி.எஸ் - 03 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்திய ஜிஎஸ்எல்வி!

ஸ்ரீஹரிகோட்டா, அக்.31-இந்தியாவின் வழிகாட்டுதல் செயற்கைகோளான என்.வி.எஸ் - 03 (NVS-03 )செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி-18 (GSLV-18) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, 24 மணி நேர கவுண்டவுனுக்கு பிறகு அக்.30 இரவு 11.51 மணிக்கு என்.வி.எஸ் - 03 செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி -18 ராக்கெட்விண் ணில் பாய்ந்தது. அது 2,232 கிலோ கிராம் எடைகொண்ட என்.வி.எஸ் - 03 செயற்கைகோளை, நிர்ணயிக்கப் பட்ட புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

அமெரிக்காவில் ஜிபிஎஸ் சேவையை போன்று இந்தியாவில் நேவிக் (NavIC) சேவை பயன்பாட்டில் உள் ளது. இந்த நேவிக் சேவையை துல்லியமாக வழங்குவதற்கு 7 செயற்கைகோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப் பட வேண்டும். அதற்காக 11 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. ஆனால் அவற்றில் 3 மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான், வெள்ளிக் கிழமை (அக்.30) அன்று இரவு என்.வி.எஸ் - 03 செயற்கைக் கோளானது வெற்றிகரமாக ஏவப்பட்டு, சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இது நேவிக் சேவைக்கான 4-ஆவது வெற்றிகரமான செயற்கைகோளாகும்.

இந்த செயற்கைக்கோளானது ரயில்கள், வாகனங்கள் மற்றும் கப்பல்கள் எங்கு இருக்கின்றன என்பதை துல்லியமாக கண்காணிக்க உதவுவதோடு, நமது நாட்டிற்கான துல்லியமான நேரம் மற்றும் இருப்பிடதகவல்களை வழங்கும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரூபிடியம் அணு கடிகாரம் இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.