முந்தய பக்கம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘இஸ்ரோ கல்விச் சுற்றுலா’

17 Jun 2026, 9:54 pm
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  ‘இஸ்ரோ கல்விச் சுற்றுலா’

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘இஸ்ரோ கல்விச் சுற்றுலா’

கோவை, ஜூன் 17- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோவை மாவட்டம் சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களி டையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகை யில் இலவச கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் 55 அரசுப் பள்ளி மாணவர்களும் வழிகாட்டி ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். இச்சுற்றுலாவைக் கோவை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைகாண் மைய வழிகாட்டிப் பேரா சிரியர் லெனின் பாரதி செவ்வாயன்று கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் பேராசிரியர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மணி, பொருளாளர் விஸ்வ நாதன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர். மாணவர்கள் திருவனந்தபுரத்திலுள்ள இஸ்ரோ வின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் ஒரு பகுதியான ‘தும்பா நிலநடுக்கோட்டு ஏவூர்தி ஏவுத ளத்தை’ பார்வையிட உள்ளனர். மேலும், விண்வெளி அருங்காட்சியகத்தை பார்வையிடுவதுடன், இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாருடன் கலந்துரையாடி விண்வெளித் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளவுள்ளனர். இச்சுற்றுலாவின் சிறப்பம்சமாக, தும்பா ஏவு தளத்திலிருந்து ஏவப்படவுள்ள ’RH-200 சவுண்டிங் ராக்கெட்’ ஏவுதலை மாணவர்கள் நேரில் காணும் அரிய வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மாண வர்களின் விண்வெளி ஆராய்ச்சி ஆர்வத்தை பெரு மளவில் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram