முந்தய பக்கம்

மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பப் போட்டி இஸ்ரோ அறிவிப்பு

14 Jun 2026, 10:15 pm
மாணவர்களுக்கு விண்வெளி  தொழில்நுட்பப் போட்டி இஸ்ரோ அறிவிப்பு
<p><strong>மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பப் போட்டி இஸ்ரோ அறிவிப்பு</strong></p><p>சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மூன்றாம் ஆண்டாக “பாரதிய அந்தரிக்க்ஷ் ஹேக்கத்தான் 2026” என்ற மாணவர் தொழில்நுட்பப் போட் டியை அறிவித்துள்ளது. விண்வெளித் துறை சார்ந்த சவால்களுக்கு புதிய மென்பொருள் அல்லது வன்பொருள் தீர்வுகளை உருவாக்குவதே இந்தப் போட்டியின் நோக்கம். அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனங்களில் பயிலும் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம். பணிபுரியும் வல்லுநர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் மூன்று முதல் நான்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். வெவ்வேறு கல்லூரி களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே குழுவில் இணையலாம். பங்கேற்பு முற்றிலும் இலவசம். ஜூன் 15 (திங்கட்கிழமை) மற்றும் ஜூன் 16 (செவ்வாய்க் கிழமை) ஆகிய இரு நாட்களும் சிறப்பு விளக்க அமர்வு கள் நடைபெறவுள்ளன. Hack2skill இணையதளம் வழியாக ஜூலை 1 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளின் பட்டியல் ஜூலை 20 அன்று வெளியிடப்படும். ஜூலை 21 அன்று அறிமுக அமர்வும், ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இறுதிப் போட்டியும் நடைபெறும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram