தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி இந்தியாவிற்கு வர தயக்கம் காட்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
25 Nov 2025, 3:29 pm
<p><strong>தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி இந்தியாவிற்கு வர தயக்கம் காட்டும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு</strong></p>
<p>இஸ்ரேல் பிரதமரும், பிரதமர் மோடி யின் நெருங்கிய நண்பருமான பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க பெஞ்சமின் நேதன் யாகு திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்பின் போது வெப்பமயமாதல் உள்ளிட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என இஸ்ரேல் அமைச்சகம் அறிவித்து இருந்தது. ஆனால் சமீபத்தில் நிகழ்ந்த தில்லி குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு அச்சம் காரணமாக நேதன்யாகு இந்திய சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்துள்ள தாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம் 2025ஆம் ஆண்டு நேதன்யாகு தனது இந்திய பய ணத்தை ரத்து செய்வது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக ஏப்ரல், செப்டம் பர் மாதங்களில் நேதன்யாகு இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து இருந் தார். தில்லி குண்டுவெடிப்பு அச்சம் கார ணமாக இந்தியாவின் பாதுகாப்பு கட்ட மைப்பில் நம்பிக்கை இல்லை என்பதை தனது பயண ஒத்திவைப்பு நடவடிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு.</p>
