இஸ்ரேலிய இந்துத்துவா சினிமா: உச்சத்தை நோக்கிய இனவெறுப்பு அரசியல்
7 Jun 2026, 10:27 pm

இஸ்ரேலிய இந்துத்துவா சினிமா: உச்சத்தை நோக்கிய இனவெறுப்பு அரசியல்

மனித மனங்களில் வெறுப்பை உருவாக்குவதற்கு ஆதிக்கச் சக்திகள் பயன்படுத்தும் மிக முக்கியக் கருவியாகச் சினிமா இருந்து வருகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘ஜேம்ஸ் பாண்ட்’ படங்கள் மூலமும், இந்திய இந்துத்துவச் சக்திகள் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கேரளா ஸ்டோரி’ மூலமும் முன்னெடுக்கும் அதே வெறுப்பு அரசியலை இஸ்ரேலியச் சியோனிச அரசு எவ்வாறு சினிமா வழியாகச் செய்கிறது என்பதைத் தோலுரிக்கிறது இ.பா. சிந்தன் எழுதிய ‘இஸ்ரேலிய இந்துத்துவா சினிமா’ என்னும் நூல்.

1948-இல் பாலஸ்தீன மக்களின் நிலங்களைப் பறித்து, எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்களை விரட்டியடித்துத் தோன்றிய இஸ்ரேல் அரசு, தனது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தச் சினிமாவை ஆயுதமாக ஏந்தியது. இதற்காக இஸ்ரேலிய ராணுவமே ‘ஐ.டி.எஃப் பிலிம் யூனிட்’ என்ற திரைப்படக் கழகத்தை உருவாக்கியது.

‘எக்சோடஸ்’ போன்ற திரைப்படங்கள் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு வரலாற்றைத் திசைதிருப்பி, அதனை யூதர்களின் விடுதலைப் போராட்டமாகச் சித்தரித்தன. தேசியவாதம், தேசபக்தி என்ற பெயரில் பாலஸ்தீனர்கள் மீதான கொடூரமான இனவெறிப் பிரச்சாரமே இத்தகைய படங்களின் மையப்புள்ளியாகும்.

வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறிய யூதர்களுக்குள்ளேயே நிலவும் வர்க்க, நிறப் பாகுபாடுகளை மூடிமறைக்கவும், பாலஸ்தீனர்கள் மீதான வெறுப்பைத் தக்கவைக்கவும் பள்ளிக்கூடக் கல்வியும், கட்டாய ராணுவ சேவையும் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இத்தகைய வெறுப்புச் சினிமாக்களுக்கு இஸ்ரேலிய அரசு சுமார் ₹3,000 கோடியை நிதியாக வழங்கியுள்ளது. இந்தியச் சூழலிலும் கார்ப்பரேட் துணையோடு பல்லாயிரம் கோடிகளில் எடுக்கப்படும் இந்துத்துவப் பிரச்சாரப் படங்களின் மர்மப் பின்னணியையும், லாப நோக்கத்தையும் நாம் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

இஸ்ரேலின் சியோனிச இனவெறிப் பிரச்சாரமும், இந்தியாவின் இந்துத்துவ வெறுப்புப் பிரச்சாரமும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதை அம்பலப்படுத்தும் இந்நூல், பாசிசக் கருத்துருவாக்கங்களுக்கு எதிராக நாம் உடனே களம் காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இஸ்ரேலிய இந்துத்துவா சினிமா ஆசிரியர்: இ.பா. சிந்தன் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 72 | விலை: ₹80 தொடர்புக்கு: 9444960935