முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

2 Sept 2026, 8:38 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

டேங்கரிலிருந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது, இஸ்ரேல் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஈரானில், ஒரு திருமண ஊர்வலத்தை அமெரிக்க ராணுவம் தாக்கியதில் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். எல்லாக் குழந்தைகளும் சமம் என்று யார் சொன்னது?

சிபிஎம் கேரள மாநிலச் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர்

சங் பரிவார் அமைப்புகளைப் புகழ்ந்து பாடும் குழுவாக காங்கிரஸ் அரசு சீரழிந்துவிட்டது. காவிமயமாக்கலை எதிர்க்க முயலும் மாணவர்களும் இளைஞர்களும் கொடூரமான தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றனர். இதற்கு எதிராகக் கேரளா முழுவதும் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும்.

பத்திரிகையாளர் சுகாசினி ஹைதர்

2002 இல், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 50 பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும் நாங்கள் பொதுமக்களை கொல்லவில்லை என அமெரிக்கா மறுத்தது. கொல்லப்பட்டவர்கள் திருமணத்தில் பங்கேற்றவர்கள் தான் என தெரியவந்த பின்னரும் கூட, அதிகாரப்பூர்வ ராணுவ விசாரணையானது சம்பந்தப்பட்ட படையினரை எவ்விதத் தவறும் செய்யவில்லை என்று விடுவித்தது.

Share
FacebookXWhatsAppTelegram