தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈரான் மீது அணு குண்டு வீச வற்புறுத்தும் இஸ்ரேல் : டக்கர் கார்ல்சன் பரபரப்புத் தகவல்

2 Nov 2026, 9:40 pm
ஈரான் மீது அணு குண்டு வீச வற்புறுத்தும் இஸ்ரேல் : டக்கர் கார்ல்சன் பரபரப்புத் தகவல்

ஈரான் மீது அணு குண்டு வீச வற்புறுத்தும் இஸ்ரேல் : டக்கர் கார்ல்சன் பரபரப்புத் தகவல்

நியூயார்க்,நவ.2- அமெரிக்க ராணுவம் ஈரான் மீது அணுகுண்டுவீச வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்நேதன்யாகு, டிரம்ப்பிடம் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக நவம்பர் 7க்குள் டிரம்ப்முடிவு எடுக்கலாம் என்று அமெரிக்காவின் பிரபலஅரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான டக்கர் கார்ல்சன் (Tucker Carlson) தெரிவித்துள்ளார்.

எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில், ஈரானில் பூமிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி செறிவூட்டல் மையமான ‘பிகாக்ஸ் மவுண்டைன்’ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று நேதன்யாகு விரும்புகிறார். ஈரானில் உள்ள ரகசிய சுரங்கப்பாதைகளில் ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை நம்புவதாகவும் டக்கர் கார்ல்சன் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு டக்கர் கார்ல்சன் தகுந்த ஆதாரங்களை எதையும் வழங்கவில்லை; அமெரிக்க அல்லது இஸ்ரேல்அதிகாரிகளும் இதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

மேலும் அமெரிக்கா பயன்படுத்துகிற மற்றும்அதன் வசம் உள்ள எந்தவொரு வழக்கமான (Conventional) ஆயுதத்தாலும் 300 அடி தடிமனான கிரானைட் பாறைகளைத் துளைத்துக்கொண்டு நிலத்தடிசுரங்கங்களை அழிக்க முடியாது. எனவே அணு ஆயுதங்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்படலாம் என்று அவரஎச்சரித்துள்ளார்.

முதல் கட்டமாக அமெரிக்காவும் இஸ்ரேலும் 40நாட்கள் ஈரான் மீது குண்டுவீசித் தாக்கின. இரண்டாம் கட்டமாக 13 நாட்களுக்கு ஈரானை அமெரிக்கா தாக்கியது. ஜூன் 17 அன்று இரு நாடுகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. அதன்பிறகும் அமெரிக்கா ஈரானின்கடற்பகுதியில் தனது கடற்படையை நிறுத்தி அந்நாட்டை முற்றுகையிட்டுள்ளது இந்த நடவடிக்கைகள் எதுவுமே ஈரானை அமெரிக்காவிடம் மண்டியிட வைக்கவில்லை. இதன்காரணமாக ஈரானை படியவைக்க அமெரிக்கா தற்போது மாற்றுவழிகளைத் தேடும் கட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் அது ஈரான், மேற்காசிய நாடுகள் மட்டுமின்றிஒட்டுமொத்த உலகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

இது உலகளாவிய அணு ஆயுதப் பரவலை மேலும்வேகப்படுத்தும். டக்கர் கார்ல்சன் நம்பமுடியாத தகவல்களை பகிரங்கமாக அறிவிப்பார். எனினும் கடந்த பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்திலேயே “ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கான முடிவை அமெரிக்கா ஏற்கெனவே எடுத்துவிட்டது, எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம்” என்று அவர் துல்லியமாகக்கணித்துக் கூறினார். இதன் காரணமாக இவரது எச்சரிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.