இஸ்ரேல் - ஸ்காட்லாந்து கால்பந்து போட்டிக்கு கடும் எதிர்ப்பு கொல்லப்பட்ட பாலஸ்தீன வீரர்களுக்கு ஆதரவாக பெரும் போராட்டம்
11 Jun 2026, 8:56 pm

இஸ்ரேல் - ஸ்காட்லாந்து கால்பந்து போட்டிக்கு கடும் எதிர்ப்பு கொல்லப்பட்ட பாலஸ்தீன வீரர்களுக்கு ஆதரவாக பெரும் போராட்டம்

ஹங்கேரி நாட்டின் புடா பெஸ்டில் ஸ்காட்லாந்து - இஸ்ரேல் மகளிர் அணிகளுக்கு இடை யேயான கால்பந்து போட்டி நடை பெற்றது. இஸ்ரேலுடன் விளையாடு வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், காசா போரில் கொல்லப்பட்ட (இஸ்ரேல் ராணுவத்தால்) பாலஸ்தீன கால்பந்து வீரர்களுக்கு ஆதரவாக ஸ்காட்லாந்தில் மனித உரிமை ஆர்வ லர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள ‘ஹாம்டன் பார்க்’ மைதா னத்திற்கு வெளியே நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரண்ட மனித உரிமை ஆர்வலர்கள், போரில் உயிரிழந்த பாலஸ்தீன வீரர்களின் புகைப்படங் களை ஏந்தியும், பாலஸ்தீன கால்பந்து ஜெர்சிகள், கழுத்துப்பட்டைகளை காட்சிப்படுத்தியும், மலர்கள் தூவியும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

700 வீரர்கள் பலி

இதுதொடர்பாக ஸ்காட்லாந்து மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகை யில், “காசா போரின் காரணமாக பாலஸ்தீன விளையாட்டு உலகம் சந்தித்துள்ள பாதிப்புகளை உலகிற்கு உணர்த்துவதே தங்களது நோக்கம். இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன தடகள, கால்பந்து வீரர்கள் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் பாலஸ்தீனத்தில் உள்ள 146-க்கும் மேற்பட்ட விளை யாட்டு மைதானங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. “பாலஸ்தீன த்தின் பீலே” என்று அழைக்கப்படும் தேசிய அணியின் முன்னாள் வீரர் சுலை மான் அல்-ஒபைத், நட்சத்திர ஆட்டக் காரர் முகமது பரகாத், பயிற்சி யாளர் ஹானி அல்-மஸ்தார் ஆகியோ ரும் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகி யுள்ளனர்.

சமீபத்தில் கூட பாலஸ்தீன பெண் கால்பந்து வீராங்கனைகளான ராண்ட் ஹலவானி, நடாலி அபு திய்யா ஆகியோ ரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது என்று கூறினர்.