தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

26 Aug 2026, 9:01 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

பட்டம் பறக்கவிட்டால் குண்டு வீச இஸ்ரேல் உத்தரவு

டெல்அவிவ்,ஆக.26-காசாவில் பாலஸ்தீன குழந்தைகள் பறக்க விடும்பட்டங்கள் இஸ்ரேலுக்குள் வந்தால் அவை டிரோன்களாககருதப்படும். இஸ்ரேலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே கருதப்படும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இத்தகையகொடூரமான அறிவிப்பிற்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

கடந்த வாரம் இறுதியில் காசா எல்லைக்கு அருகில் உள்ள இஸ்ரேலின் நஹால் ஓஸ் (Nahal Oz) கிப்புட்ஸ் பகுதிக்கு மேல் நான்கு காகிதப் பட்டங்கள் பறந்தன என இஸ்ரேல் ராணுவம் கூறியது. மேலும் இந்த பட்டங்கள் பறந்து வந்ததற்கு காரணம் ஹமாஸ் அமைப்பு தான் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காசா பகுதியில் இருந்து காகிதப் பட்டத்தை பறக்க விடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க (தாக்குதல் நடத்த) இஸ்ரேல் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர்பெஞ்சமின் நேதன்யாகுவும், பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல்காட்ஸும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 23) அறிவித்தனர்.

“இந்த ஆபத்தான ஆயுதத்திற்கு (காகிதப் பட்டத்திற்கு) எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறுஇஸ்ரேல் படைகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அதைத்தாக்குவது, அதை பறக்க விட்டவர்களை தாக்குவது, அது எந்த இடத்தில் இருந்து பறக்கவிடப்பட்டதோ அந்தஇடத்தைத் தாக்குவது என அனைத்தையும் செய்ய வேண்டும்,” என்று நேதன்யாகு உத்தரவிட்டார்.காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மிகப்பெரியபாதிப்புகளை குழந்தைகள் சந்தித்துள்ளனர். மன ரீதியாகஉடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு குறைந்தபட்ச நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை கொடுக்க அங்குள்ளதன்னார்வலர்களும் மனிதாபிமான அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன.இதன் ஒருபகுதியாக குழந்தைகள் பட்டம் செய்து பறக்க விட்டு மகிழ்கின்றன. அப்படி பறக்கவிடப்படும் சிலபடங்கள் கயிறு அறுந்து சென்று விடுகின்றன. அதில்சில இஸ்ரேலுக்கும் செல்கிறது. அப்படி வரும் பட்டங்களுக்கு தான் நேதன்யாகு இப்படிப்பட்ட தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, (ஞாயிற்றுக்கிழமை) மத்திய காசாவில் உள்ள அல்-ஸவாய்தா (az-Zawayda) நகரில் உள்ள ஒரு சேமிப்புக்கிடங்கு மற்றும் சலா அல்-டின் (Salah al-Din) சாலையில் உள்ள இரண்டு பகுதிகளில் இஸ்ரேலியப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் நான்கு வயதுக் குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்தனர். திங்கள்கிழமை (ஆக.24) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும்துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பலர்படுகாயமடைந்தனர்.

இந்த உத்தரவு வெளியான பிறகு, நேதன்யாகு திருப்தியடைய வேண்டும் என்பதற்காக, டிரம்ப் திருப்தியடைய வேண்டும் என்பதற்காக, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறைஅமைச்சர் காட்ஸ் (Katz) திருப்தியடைய வேண்டும் என்பதற்காக நாங்கள் விரும்பும் விஷயங்களை எங்களிடமிருந்து அவர்கள் பறிக்க விரும்புகிறார்கள் என்று காசாவில் ஒரு பாலஸ்தீனச் சிறுவன் தனது காகிதப் பட்டத்தை கிழித்தெறிந்து கண்ணீர் விட்டு அழுத காணொளி பார்ப்பவர் மனதை உருக செய்துள்ளது.

ஐரோப்பாவில் ராணுவம் : மறுபரிசீலனை செய்யும் அமெரிக்கா

ஈரான் உடனான போரில் அமெரிக்காவுக்கு ஐரோப்பிய நாடுகள் போதிய அளவு உதவி செய்யவில்லை. இதனால் ஐரோப்பியக் கண்டத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்பை ஐரோப்பிய நாடுகளே ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கப் படைகளை மறுபரிசீலனை செய்வது குறித்து நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார். இதற்காக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி நேட்டோ நாடுகளின் தூதர்களைச் சந்தித்துப் பேச உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்டுத்தீ பாதிப்பு : சுவாசப் பிரச்சனை

இந்தோனேசியாவின் போர்னியோ மற்றும் சுமத்ரா தீவுகளில் எல் நினோ (El Nino) காரணமாக ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பல நகரங்கள் அடர்ந்த புகையால் சூழப்பட்டுள்ளன. இப்புகையால் லட்சக்கணக்கான இந்தோனேசிய மக்களுக்கு உடல்நலச் சிக்கல்கள் சுவா

சப்பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த அடர்ந்த புகை அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கும் பரவியுள்ளது.

குழாய் வழி எரிவாயுவுக்கு ஜப்பான் ஆதரவு

ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக உலகளவில் கப்பல் வழி கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி வணிகம் முடங்கியுள்ளது. இந்நிலையில் தனது நாட்டின் ஆற்றல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து குழாய் மூலம் எண்ணெய் கடத்தும் திட்டங்களுக்கு ஆதரவளிக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கச்சா எண்ணெய் பரிமாற்றத்திற்கு புதிய வழிகளை உருவாக்கவும், விரிவாக்கவும் சவூதி அரேபியா மற்றும் பிற நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஜப்பான் உதவும் என்று நிக்கேய் (Nikkei) எனும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க சிஐஏ தலைவர் திடீரென ரஷ்ய பயணம்

சிஐஏ தலைவர் ஜான் ரட்க்ளிஃப் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா சென்றுள்ளார் என சிபிஎஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு பெரிய அமெரிக்க ராணுவ விமா

னம் லாட்வியா வழியாக அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவிற்கு சென்றுள்ளதை விமானக் கண்காணிப்புத் தரவுகள் உறுதிப்படுத்தின. அதில் சிஐஏ-வின் தலைவர் சென்றிருக்கலாம். இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்தோ அல்லது அவர் யாரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார் என்பது குறித்தோ அந்த ஒரு நாடும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என சிபிஎஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு கனடா வரி

அமெரிக்காவின் 700-க்கும் மேற்பட்ட பொருட்களுக்குப் கனடா வரி விதித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக நாடுகளின் மீது வர்த்தப்போரை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கனடா மீதும் வரிகளை விதித்தார். அமெரிக்க அதிகாரிகளுடன் கனடா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது, இந்நிலையில் அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா இந்த வரிகளை விதித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.