இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவா் ஆட்சி அமைக்க முயற்சி : நேதன்யாகு கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பதாக தகவல்
9 Nov 2026, 8:24 pm

இஸ்ரேல் எதிர்கட்சித் தலைவா் ஆட்சி அமைக்க முயற்சி : நேதன்யாகு கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்பதாக தகவல்

டெல்அவிவ்,நவ.9-இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ராணுவத் தளபதியுமான காடி ஐசென்காட் ஆட்சி அமைக்க நேதன்யாகுவின் கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 27 அன்று நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் எந்த ஒரு தனிக் கட்சியும் கூட்டணியும் பெரும்பான்மை பெறவில்லை. 120 இடங்களைக் கொண்ட நாடாளுமன்ற இடங்களில் பெரும்பான்மை பலம் பெற 61 இடங்கள் தேவைப் படுகிறது. இதில் ஐசென்காட்டின் ‘யஷார்’ (Yashar) கட்சி கூட்டணி 48 இடங்களையும், நேதன்யாகுவின் லிகுட் தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் வென்றுள்ளன. இடதுசாரிகள் மற்றும் அரபுக் கட்சிகள் 19 இடங்களைக் கொண்டுள்ளன.

புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் எதிர்கட்சி களின் கூட்டணி மற்றும் ‘யஷார்’ (Yashar) கட்சி

யின் தலைவருமான முன்னாள் ராணுவ தளபதி ஐசென்காட் ஆட்சி அமைக்க ராம் அரபு கட்சியும், இடதுசாரிகள் அரபு கட்சிகளின் கூட்டணியான ஜாயின்ட் லிஸ்ட் கூட்டணி என 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய பிரதமர் நேதன்யாகுவை 46 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரித்தனர்.

முன்னதாக ஐசென்காட் அரபுக் கட்சி களின் ஆதரவை ஏற்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அரபு கட்சிகள் ஆதரவு கொடுத்தாலும் அதனை ஏற்காமல் நேதன்யாகு வின் கூட்டணியில் உள்ள தீவிர மற்றும் அதிதீவிர வலதுசாரி கட்சிகளிடம் ஆட்சி அமைக்க ஐசென்காட் ஆதரவு கோரியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியான போதே, இடதுசாரி மற்றும் அரபு கட்சிகள் உட்பட ஒட்டு மொத்தநேதன்யாகு-எதிர்ப்பு கூட்டணியும் ஐசென்காட்டுக்கு ஆதரவளித்தன. இருப்பினும், தீவிர வலதுசாரியும் யூத மத அடிப்படைவாதியுமான ஐசென்காட், அரபுக் கட்சிகளை எவ்வளவுக்கு எவ்வளவு ஆட்சியில் வெளியே தள்ளி வைக்க முடியுமோ, அந்த அளவுக்கு முயன்று வருகிறார். மேலும் நேதன்யாகுவின் லிகுட் கட்சி உள்ளிட்டு யூதக் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தனக்கு ஆதரவளிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு ஒரு தேசிய அரசியலை உருவாக்கப் போகிறேன். லிகுட் கட்சியும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐசென்காட் அரபு கட்சிகளின் ஆதரவை பெறுவாரா என விவாதம் எழுந்த போதே நேதன்யாகுவும் பிற கட்சிகளும் அவருக்கு எதிராக தீவிர மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்ட தைத் தொடர்ந்து ஐசென்காட் இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தால்

பாலஸ்தீனர்களின் மீதான இனப்படுகொலை களுக்கு தடைகள் எழும், அரபு மக்களுக்கான சில அடிப்படை உரிமைகள் கொடுக்க வேண்டிய சூழல் வரும் என்பதால் அவற்றை தவிர்க்க யூத அடிப்படைவாதக் கட்சிகளை இணைக்க ஐசென்காட் முயற்சி செய்து வருகின்றார்.

புதிய அரசை அமைப்பதற்காக ஐசென்காட்டுக்கு ஆறு வாரங்கள் அவகாசம் உள்ளது. ஆட்சி அமைத்து பெரும்பான்மை காட்ட ஐசென்காட்டுக்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால் ஜனாதிபதியால் மேலும் 14 நாட்கள் அவகாசம் தர முடியும். பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.