‘எதிர்காலத்தில் தன்னை எதிர்க்க ஆளிருக்கக் கூடாது என்ற வெறி’ 20 ஆயிரம் பாலஸ்தீன குழந்தைகளை திட்டமிட்டு படுகொலை செய்த இஸ்ரேல்!
26 Jun 2026, 9:58 pm

‘எதிர்காலத்தில் தன்னை எதிர்க்க ஆளிருக்கக் கூடாது என்ற வெறி’ 20 ஆயிரம் பாலஸ்தீன குழந்தைகளை திட்டமிட்டு படுகொலை செய்த இஸ்ரேல்!

ஐ.நா. விசாரணை ஆணையம் அதிர்ச்சி அறிக்கை!

னீவா, ஜூன் 26 - 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் ராணுவம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனக் குழந்தைகளை படுகொலை செய்துள்ளதாக ஐ.நா.வின் சுதந்திர சர்வ தேச விசாரணை ஆணையம் அதிர்ச்சிகர மான உண்மைகளை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் குறிவைத்தே குழந்தைகளை கொன்று வருவதாகவும், பாலஸ்தீனத்தின் எதிர்காலத்தை அழிப்பதே இஸ்ரேலின் திட்டம் என்றும் ஐ.நா. ஆணையம் கூறியுள்ளது. இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீ னப் பகுதிக்கான இந்த ஐ.நா. குழுவின் தலைவரும், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான எஸ். முரளிதர், ஜெனிவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இஸ்ரேல் செய்து வரும் படுகொலைகள் தொடர்பான 100 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

குழந்தைப் பருவம் அழிக்கப்பட்டுவிட்டது

“அதில், திட்டமிட்ட தாக்குதல்கள் மூலம் பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொலை செய்தது, சித்ரவதை செய்தது, அவர்களின் குழந்தைப் பருவத்தையே இஸ்ரேல் ராணுவம் அழித்ததற்கு எங்களி டம் மறுக்க முடியாத ஆதாரங்கள் உள் ளன!” என்று முரளிதர் தெரிவித்துள்ளார். 2023 அக்டோபர் 7 முதல் 2025 அக்டோபர் 7 வரையிலான இரண்டு ஆண்டு காலப்பகுதியில் மட்டும் காசா வில் 20,179 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண் ணிக்கை, போரில் கொல்லப்பட்டவர்களில் 30 சதவிகிதமாகும். அதேபோல 44 ஆயிரத்து 143 குழந்தைகள் படுகாய மடைந்துள்ளனர். இதுவும் ஒட்டுமொத்த மாக காயமடைந்தவர்களின் எண் ணிக்கையில் 26 சதவிகிதம் ஆகும்.

கொல்லப்பட்டவர்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும் 5,031 பேர் ஆவர். ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 1,029 பேர், 420 பிறந்த குழந்தைகள் (new borns) அடங்கும். இது காசாவின் மொத்தக் குழந்தைகள் எண்ணிக்கையில் 2 சதவிகிதத்திற்கும் அதிகமாகும். ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பின் ஆய்வின்படி, கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் 5,160 குழந்தைகள் புதைந்திருக்க லாம் என கூறப்படுகிறது. மேலும் பலியான குழந்தைகளின் உண்மையான எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2008-2009 மற்றும் 2014ஆம் ஆண்டு இஸ்ரேல் - காசா போர்களில் கொல்லப்பட்ட குழந்தைகள் 24 சதவிகித மாக இருந்தனர். ஆனால் தற்போதைய போரில் அது 30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

போர் நிறுத்தத்திற்குப் பிறகும் தொடரும் கொடூரம்

2025 அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட, சர்வதேசச் சட்டங்களையும் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் முற்றிலும் மதிக்காமல் இஸ்ரேல் தொடர்ந்து குழந்தைகளைக் கொன்று குவித்து வருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் அமலாகி இருந்த நேரத்தில் தனது வீட்டை விட்டு வெளியே வந்த 14 வயது சிறுவன் ஒருவனை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் காயப்படுத்தி னர். அச்சிறுவன் தரையில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது, இஸ்ரேல் வீரர்கள் சுற்றிநின்று பேசி சிரித்துக்கொண்டும், புகைபிடித்துக் கொண்டும் இருந்துள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் மிகக்கொடூரமான முறையில் அந்த சிறுவன் ரத்தம் வழிந்து சாகும் வரை அவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என காசாவில் நடந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

சித்ரவதையும் பாலியல் வன்முறையும்

பாலஸ்தீனக் குழந்தைகள் கைது செய்யப்பட்டு, இஸ்ரேல் சிறைகளில் கடு மையான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். அவர்கள் எங்கு இருக் கிறார்கள் என்ற விபரம் குடும்பத்தின ருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. மேலும் ஒட்டுமொத்த பாலஸ்தீன சமூகத்தையும் அவமானப்படுத்துவதற்கும் ஒடுக்கு வதற்கும் ஒரு கருவியாக, குழந்தை களுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் பாலியல் மற்றும் பாலின ரீதியி லான வன்முறைகளையும் அரங்கேற்றி யுள்ளன.

உள்கட்டமைப்பு அழிப்பு

மகப்பேறு மற்றும் பிறந்த குழந்தை களுக்கான பராமரிப்பு மையங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற குழந்தைகளுக்கு அவசியமான முக்கிய கட்டமைப்புகளை இஸ்ரேல் திட்ட மிட்டு அழித்துள்ளது. இது பாலஸ்தீன மக்களின் எதிர்கால சந்ததிப் பெருக்கத்தை யும், குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் சமூக உணர்ச்சிப்பூர்வமான வளர்ச்சி யையும் நேரடியாகப் பாதித்துள்ளது. போரினால் ஏற்பட்டுள்ள தொடர் இடப்பெயர்வுகள், பட்டினி, கல்வி மற்றும் சுகாதார அமைப்புகளின் வீழ்ச்சி ஆகிய வற்றால் காசா குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு, குண்டுகளும் துப்பாக்கி களும் பயன்படுத்தப்படா விட்டாலும் கூட பாலஸ்தீனக் குழந்தைகள் ஒரே இரவில் மீண்டுவிட மாட்டார்கள். அந்த அளவிற்கு, அவர்களின் ஆரோக்கியம் மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சி மீட்டெடுக்க முடியாததாக மாறியுள்ளது. இது குழந்தை களின் மனதில் ஒரு தனி ‘ஆக்கிரமிக்கப் பட்ட மனநிலையை’ (occupied psyche) உருவாக்கி, அவர்களின் சுதந்திரம், கற்பனை, நம்பிக்கையைப் பறித்துள்ளது என்று முரளிதர் கவலை தெரிவித்துள் ளார்.

குடியேறிகளின் வன்முறை

மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருச லேமில் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு எதிராக இஸ்ரேல் மக்களின் ‘குடியேறி களால் (settlers)’ நடத்தப்படும் வன்முறை கள் பெருமளவில் அதிகரித்துள்ளன. சட்டவிரோதமாக பாலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமிக்க இஸ்ரேல் அரசும், இந்த வன்முறைக் குழுக்களும் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு அவைக்கு கோரிக்கை

பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் ஒரு நாட்டில் வாழ்வதையும் தடுப்பதற்காகவே இஸ்ரேல் அம்மக்களின் குழந்தைகளை குறி வைக்கிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் ஐ.நா பாதுகாப்பு அவைக்கு சில பரிந்துரை களையும் வழங்கியுள்ளது:

காசாவில் இஸ்ரேல் உடனடியாக தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். இஸ்ரேலுடனான அனைத்து இருதரப்பு ராணுவ வர்த்தகங்களையும் தடை செய்ய வேண்டும். 2023 அக்டோபர் முதல் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது பயணத் தடைகள், சொத்து முடக்கம் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட ‘உடனடி, விரிவான தடைகளை’ ஐ.நா பாதுகாப்பு அவை விதிக்க வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) அறிவுரைப்படி, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஆக்கிர மிப்புகளை இஸ்ரேல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பாதிக்கப்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகள் மற்றும் மக்களுக்கு நீதி வழங்குவது மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று ஐ.நா ஆணையம் வலுவாக வலியுறுத்தியுள்ளது.