நிவாரணப் படகுகளை மீண்டும் இடைமறித்து கடத்தியது இஸ்ரேல்
20 May 2026, 9:18 pm

நிவாரணப் படகுகளை மீண்டும் இடைமறித்து கடத்தியது இஸ்ரேல்

காசா, மே 20- காசாவிற்கு கடல் வழியாக நிவாரணப்பொ ருட்களை கொண்டு சென்ற சுமூத் கப்பல் குழு வின் படகுகளை செவ்வாய்க்கிழமை மீண்டும் இடைமறித்து கடத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு தேவை யான உணவு, தண்ணீர், மருந்துப்பொருட்களை கொடுக்காமல் அவர்களை செயற்கை பஞ்சத்தில் தள்ளியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.

இந்த மோச மான சூழலில் பாலஸ்தீனர்கள் உயிர் பிழைத்து இருப்பதே கடினமானதாக மாறியுள்ளது.

இந்தச் சூழலில் தான் கடல் வழியாக காசா விற்கு மருந்துகள், உணவு உள்ளிட்ட அத்தியா வசிய நிவாரணப்பொருட்களுடன் ‘சுமூத் கப்பல் குழு’ (Global Sumud Flotilla) சிறு படகுகளுடன் செல்கிறது.

சில வாரங்களுக்கு முன் 50 க்கும் மேற்பட்ட படகுகளுடன் சென்ற நிலையில் அவர்க ளை சர்வதேச கடல்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து துப்பாக்கி முனை யில் கடத்திச் சென்றது.

தாக்குதல், நேரடி ஒளிபரப்பு தற்போது கடந்த வாரம் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளையும் காசா கடற்கரையிலிருந்து சுமார் 268 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடத்தி யுள்ளது. படகில் இருந்தவர்கள் மீது ரப்பர் குண்டு களால் சுட்டுள்ளது.

இதில் சிலருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் அத்து மீறி படகுகளை மறிப்பதையும் துப்பாக்கி முனை யில் சமூக ஆர்வலர்களை மிரட்டுவதையும் சுமூத் குழு தங்களது இணையதளத்தில் நேரடியாக ஒளி பரப்பியது. உடனடியாக படகுகளில் பொருத்தப்பட்டி ருந்த கேமராக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் உடைத்து அழித்துள்ளனர்.

41 படகுகள், 428 பேர் கடத்தல் முன்னதாக திங்களன்று சைப்ரஸ் நாட்டுக்கு அருகேயுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் அந்த கப்பல் குழுவைச் சேர்ந்த 41 படகுகளை தடுத்து அதில் இருந்த 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 428 சமூக ஆர்வலர்களை இஸ்ரேல் ராணுவம் கடத்தியது.

இந்த ஆர்வலர்கள் குழுவில் அயர்லாந்து ஜனாதிபதியின் சகோதரி கேத்தரின் கான்னோலி இருந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்கள் எங்கு வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

அவர்களுக்கு வழக்கறிஞர்களுடனான தொடர்போ அல்லது தூதரக உதவியோ வழங்கப்படவில்லை என்றும், அவர்களது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இந்த வாரம் நடந்த கடத்தல் சம்பவங்க ளுக்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 30 அன்று இதே போல் சுமூத் குழுவின் ஒரு கப்பல் குழுவை இஸ்ரேல் கடத்திச் சென்றது.

அப்படி கடத்தப்பட்ட சமூக ஆர்வ லர்களை இஸ்ரேல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது குறிப்பிடத்தக்கது.