தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூன்றாண்டுகளைக் கடந்த நேரடித் தாக்குதல் இஸ்ரேலின் போர்வெறியால் உருக்குலைந்து சுடுகாடான காசா!

7 Oct 2026, 11:24 pm
மூன்றாண்டுகளைக் கடந்த நேரடித் தாக்குதல் இஸ்ரேலின் போர்வெறியால்  உருக்குலைந்து சுடுகாடான காசா!

மூன்றாண்டுகளைக் கடந்த நேரடித் தாக்குதல் இஸ்ரேலின் போர்வெறியால் உருக்குலைந்து சுடுகாடான காசா!

காசா, அக். 7 -காசா மீது இஸ்ரேல் தொடுத்துள்ள நேரடிப் போர் 3 ஆண்டுகளைக் கடந்து விட்டது. கடந்த 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் தாக்குதலைத்தொடங்கிய பிறகு, தற்போதுவரை தொடர்ந்து நடத்தி வரும் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களால்பாலஸ்தீனப் பகுதி முற்றிலும் உருக்குலைந்து சுடுகாடாக மாறியுள்ளது.

காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி, இதுவரை 74,245-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025 அக்டோபரில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதிலும், போர்வெறி அடங்காதஇஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர்நிறுத்தக் காலத்திற்குப் பிறகும் 1,462 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வாழ்வா, சாவா என்ற போராட்டமாக வாழ்க்கை

காசாவில் உள்கட்டமைப்புகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தையும் இஸ்ரேல் நிர்மூலமாக்கியுள்ளது. காசாவில் உள்ள 94 சதவீத மக்களுக்கு அவசர இருப்பிட உதவி தேவைப்படுகிறது. வீடுகளை இழந்த 65 சதவீத குடும்பங்கள் தற்காலிகக் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், 91 சதவீத குடும்பங்கள்கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றன. மின்சாரக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டு விட்டது.இதேநேரத்தில், மக்களுக்குத் தேவையான குடிநீர், எரிபொருள், மருந்துகள் மற்றும் கஞ்சி தயாரிக்கத் தேவையானமாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களைக்கூட காசா பகுதிக்குள் கொண்டு செல்ல விடாமல் ஐ.நா. நிவாரண அமைப்புகளை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தடுத்து வருகிறது.

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சால் பாலஸ்தீனர்களின் விவசாயம் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது. வேலையின்மை விகிதம் 78 சதவீதத்தை எட்டியுள்ளது. 92 சதவீத வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. காசாவைச் சுற்றி யுள்ள எல்லைகள் முற்றிலும்அடைக்கப்பட்டுள்ளன.

7 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி!

காசாவில் உள்ள 98 சதவீத பள்ளிக் கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது தகர்க்கப் பட்டுள்ளன. இதனால், 4 முதல் 17 வயது வரையிலான சுமார் 7 லட்சம் பாலஸ்தீனக் குழந்தைகளின் கல்வி தொடர்ச்சியாக 3ஆண்டுகளாகப் பறிக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வியே கிடைக்காத நிலைஉருவாகியுள்ளது.

மருத்துவத் துறையும் முற்றிலுமாக அழிந்து வருகிறது. காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் 19 மருத்துவ மனைகள் மட்டுமே, அதுவும் அத்தியாவசிய மருந்துகளும் எரிபொரு ளும் இன்றி, பகுதியளவில் இயங்கிவருகின்றன. மருந்துப் பற்றாக்குறையால் புற்றுநோய் சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. சுத்தமான குடிநீர் இல்லாத தாலும், கழிவுநீர் மாசுபாடு காரணமாகவும் கொடிய தோல் தொற்றுநோய்கள் பரவி வருகின்றன.இந்த மூன்று ஆண்டுகளில் காசாவின் 70 சதவீதப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துவிட்டது. இதனால், 20 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் வெறும் 30 சதவீத நிலப்பரப்பிற்குள் எந்தவொரு பாதுகாப்பான தங்குமிடமும் நிவாரண உதவிகளும் இன்றி கூட்டம் கூட்டமாக வாழ வேண்டியகட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.