தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

yesterday
தீக்கதிர்  உலக செய்திகள்

மருந்து சேமிப்பு மையங்களை அழிக்கும் இஸ்ரேல் ராணுவம்

காசாவில் மருந்து சேமிப்பு மையங்களை தாக்கி இஸ்ரேல் ராணுவம் அழித்துள்ளது. ஏற்கெனவே காசாமருத்துவமனைகள் மீது தாக்குல்கள் நடத்திமுழு சுகாதார கட்டமைப்பையும் அழித்து விட்டது. இந்நிலையில் கடந்த வார இறுதியில் அல் அக்சா மருத்துவமனை மற்றும் மருந்து சேமிப்பு மையத்தின் மீதும்இஸ்ரேல் குண்டு வீசியது.இத்தாக்குதலில் மருந்து சேமிப்பு மையத்தில் மருந்துகள் அழிந்துபோயுள்ளன எனவும் தெரிய வந்துள்ளது. மேலும்இத்தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலர் படுகொலையாகியுள்ளனர். ஏற்கெனவே மருந்து பற்றாக்குறை உள்ள நிலையில் இத்தாக்குதல் பாலஸ்தீனர்களின் சுகாதாரபாதுகாப்பை மேலும் மோசமாக்கியுள்ளது.

உக்ரைன் தாக்குதலில் ரஷ்யாவில் 5 பேர் பலி

மாஸ்கோ மாகாணத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 5 பேர்பலியாகியுள்ளதாகவும், 6 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரே வொராபியோவ் தெரிவித்துள்ளார். மேலும் அம்மாகாணத்தில் ஒரு துணை மின் நிலையம், தொழிற்பேட்டையில் உள்ள பல கட்டமைப்புகள் டிரோன் தாக்குதலில் சேதமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யா- உக்ரைனுக்கு இடையிலான போர் நிறுத்தபேச்சுவார்த்தை தொய்வடைந்து தாக்குதல்கள்தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக ரஷ்யாவின் எரிசக்தி கட்டமைப்புகளையும் உட்கட்டமைப்புகளையும்உக்ரைன் ராணுவம் குறிவைத்து தாக்கி வருகின்றது.இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்கு

ஒரு வருட சேவை நீட்டிப்பு நன்னடத்தை பதிவைக் கொண்டுள்ள மற்றும் 60 வயதை எட்டிய காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு வருட சேவைநீட்டிப்பு வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.காவல்துறையில் அதிக காலிப்பணியிடங்கள் நிலவும் நிலையில் பணியாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும்,காவல்துறை அதிகாரிகளின் கடும் பணிச்சுமையைக் குறைக்கவும் அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு வெனிசுலா அரசு வீடு

இரட்டை நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலைநகர் காரகஸில் 87 புதியவீடுகளை வெனிசுலா அரசு வழங்கியது. மேலும், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 4,000 வீடுகளை வழங்குவதாகஉறுதியளித்துள்ளது. ‘வெனிசுலா எழுகிறது’ திட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த வீடுகள்வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்குவதே எங்களின் மிகப்பெரிய நோக்கமாகும்.மக்கள் யாரும் தனித்து விடப்படவில்லை” என்று இடைக்கால ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும், தற்காலிகமுகாம்களை நிரந்தர வீடுகளாக மாற்றுவதே அரசாங்கத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தை அவர்களுக்கு மட்டும் தான் லாபம்

இஸ்ரேல் உடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை அவர்களுக்கு மட்டும் தான் லாபம் தரும் என ஹிஸ்புல்லாபடையின் தலைவர் நயிம் காசிம் கடுமையாக விமர்சித்துள்ளார். இஸ்ரேல் உடனான நேரடிப் பேச்சுவார்த்தைகள்அனைத்தும் லெபனானுக்கு “அவமானம், இழிவு, ஏமாற்றம், தொடர்ச்சியான விட்டுக் கொடுத்தல்களை” மட்டுமேதந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர் லெபனான் அரசு பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்த வேண்டும்எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்கத் தங்கள்படை “தொடர்ந்து போராடும்” என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.