இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்:யாருக்கும் பெரும்பான்மை இல்லை
2 hours before

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களிலும், யஷார் எதிர்க் கட்சி கூட்டணி 48 இடங்களிலும், ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி(கம்யூனிஸ்ட்+அரபு கட்சிகள்) 11 இடங்களிலும், ராம் (அரபு கட்சி) 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

பெரும்பான்மைக்கு தேவையான 61 என்ற எண்ணிக்கை எந்த கூட்டணியிடமும் இல்லை.

நெதன்யாகு எதிர்கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகளை தனது கூட்டணி பக்கம் இழுக்கலாம். அல்லது அவர்களோடு இணைந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது அல்லது ராம் அரபு கட்சி ஆதரவுடன் நெதன்யாகு ஆட்சியை பிடிக்க முயற்சிக்கலாம்.

இல்லையென்றால்யூத ஆதரவு 'யஷார்' எதிர் கட்சி தலைமையிலான கூட்டணி, ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி, ராம் அரபுக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.

99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு விட்டன அதிகாரப்பூர்வ இறுதி முடிவுகள் நவம்பர் 4 அன்று வெளியாகும்.