நெதன்யாகுவின் கனவை சிதைக்கும் நாடாளுமன்ற தேர்தல்?
29 Oct 2026, 5:17 pm

நடந்து முடிந்த இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் அவரது தீவிர வலதுசாரி கூட்டணிக் கட்சிகளும் 53 இடங்களை வென்றுள்ளனர்.

நெதன்யாகுவின் லிகூட் (Likud) கட்சி 26 இடங்களை வென்று நாடாளுமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இக்கட்சி கடந்த தேர்தலில் 32 இடங்களைக் வென்றது. தற்போது இது நேதன்யாகுவின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரது அமைச்சரவையில் உள்ள இத்தாமர் பென்-கிவ்ரின் ஓட்ச்மாவின் யெஹுதி கட்சி 7 இடங்களையும் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் மத சியோனிசக் கட்சி 6 இடங்களையும் அவரது கூட்டணியில் உள்ள பிற தீவிர வலதுசாரிக் கட்சிகள் 13 இடங்களையும் பெற உள்ளன.

நேதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என அவருக்கு எதிராக களமிறங்கிய சியோனிஸ்ட் எதிர்க்கூட்டணிக்கட்சி 48 இடங்களைப் பெற்றுள்ளது.

ஆனால், 120 இடங்களைக் கொண்ட நெசெட் (Knesset) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறத் தேவையான 61 என்ற எண்ணிக் கூட்டணியிடமும் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ள ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணி (Joint List) மற்றும் ராம் (Ra’am) கட்சிகள் முறையே 11 மற்றும் 8 இடங்களை வென்று, மீதமுள்ள 19 இடங்களைக் கைப்பற்ற உள்ளன.

நெதன்யாகுவின் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை கிடைக்காத நிலையில் அரபுக் கட்சிகள் யாருக்கு ஆதரவு தருகின்றனவோ அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் முறைகேடுகள் நடந்து விட்டதாகவும் அரபு கட்சிகள் கத்தார் அரசிடம் இருந்து பணம் வாங்கி விட்டதாகவும் இஸ்ரேல் அரசலில் புதுப் பிரச்சனை கிளப்பப்பட்டுள்ளது.