போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறும் இஸ்ரேல் காசாவில் 24 பேர் பலி; 54 பேர் படுகாயம்
23 Nov 2025, 3:44 pm
<p><strong>போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறும் இஸ்ரேல் காசாவில் 24 பேர் பலி; 54 பேர் படுகாயம்</strong></p>
<p>காசா, நவ. 23- இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அக்டோபர் 10ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த அறிவிப்பை விளம்பர பொருளாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அடிக்கடி பேசி வருகிறார். ஆனால் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக வெள்ளிக்கிழமை முதல் காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்கு தலை தீவிரப்படுத்தி வருகிறது. வடக்கு மற்றும் மத்திய காசா முழுவதும் இஸ்ரேலிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 24 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் உட்பட 54 பேர் படுகாயமடைந்துள்ளனர். 312 பேர் கொலை காசாவின் ஆட்சியின் கீழ் உள்ள சுகாதாரத்துறை அதிகாரி இதுதொடர்பாக கூறுகையில், “போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்ட பிறகு இஸ்ரேல் ராணுவத்தினரால் இதுவரை 312 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இதில் பலர் குழந்தைகள் என்பது சோகமான விஷயம் ஆகும்” என அவர் கூறியுள்ளார்.</p>
