தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

லெபனானில் போப் லியோ இருந்த நாட்களிலும் குண்டுவீசிய இஸ்ரேல்!

4 Dec 2025, 3:52 pm
லெபனானில் போப் லியோ இருந்த நாட்களிலும் குண்டுவீசிய இஸ்ரேல்!
<p><strong>லெபனானில் போப் லியோ இருந்த நாட்களிலும் குண்டுவீசிய இஸ்ரேல்!</strong></p> <p>பெய்ரூட், டிச.4- போப் லியோ நவம்பர் 30 ஞாயிற்றுக் கிழமை முதல் மூன்று நாட்கள் லெபனா னுக்கு பயணம் சென்றிருந்தார். அவர் அந்நாட்டில் இருந்த நாட்களில் இஸ்ரேல் ராணுவம் லெபனான் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. &nbsp; &nbsp;லியோ கடந்த மாத இறுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். துருக்கியில் துவங்கிய அவரது வெளிநாட்டுப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக லெபனான் பயணம் அமைந்தது. லெபனானுக்குள் தரையிறங்கும் முன்னதாக செய்தியா ளர்களிடம் பேசிய போப், அரபு-இஸ்ரேல் &nbsp;நாடுகளுக்கு இடையேயான தொடர் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவ தற்கான ஒரே தீர்வு, இரு-நாடுகள் என்ற கொள்கையை ஏற்பது தான். இந்த கொள்கையை வாட்டிகன் பல ஆண்டுக ளாக ஆதரித்து வருகிறது என தெரி வித்திருந்தார். &nbsp;சமாதானம், மத நல்லிணக்கம் லெபனானுக்கு சென்ற அவர் மதத் தலைவர்களை சந்தித்து உரையாடி னார். அமைதிக்கான அழைப்பை வெளியிட்டார். அமைதி என்பது வெறும் ஒரு விருப்பம் மட்டுமல்ல, நாட்டின் சிக்க லான சமூக அமைப்பிலும், தற்போதைய சவால்களிலும் தினசரி தேவைப்படும் ஒன்று. கருத்து வேறுபாடுகளுக்கு மத்தி யிலும், சமாதானத்தை நோக்கி அழை த்துச் செல்லும் பாதை உரையாடல் தான். சமாதானம் செய்பவர்கள் பாக்கிய வான்கள் என்று கூறினார். தனது பயணத்தின் இரண்டாம் நாளில் அந்நாட்டு தலைநகர் பெய்ரூட் டின் தியாகிகள் சதுக்கத்தில் கிறிஸ்தவ மற்றும் மதங்களுக்கு இடையேயான தலைவர்களை போப் &nbsp;சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, அமைதியை அடைவதற்காக மற்ற மதங்களைப் பின் பற்றுபவர்களுடன் உரையாடலை ஏற்ப டுத்த கத்தோலிக்க திருச்சபை தயாராக உள்ளது என்ற &nbsp;விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். ஒவ்வொரு மணியோசையும், ஒவ் வொரு பாங்கு சத்தமும், ஒவ்வொரு பிரார்த்தனைக்கான அழைப்பும் அமைதி யைக் கொண்டு வருவதாக அமை யட்டும் என மத நல்லிணக்கத்தை வலி யுறுத்தினார். &nbsp;மேற்கு ஆசியா, ெனிசுலாவில் அமைதி &nbsp;லெபனானில் தனது பயணத்தின் இறுதி நாளான டிச.2 அன்று செய்தியா ளர்களிடம் பேசிய அவர், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மேற்கு ஆசியப் பகுதியில் வன்முறையை நிறுத்தி, அமைதிக்கான தீர்வுகளை நாடுவதற்காக டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் &nbsp;தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா கவும் போப் லியோ குறிப்பிட்டுள்ளார். லெபனானில் லியோ இருந்த மூன்று நாளும் இஸ்ரேல் அந்நாட்டின் மீது மோச மான தாக்குதல் நடத்தி நிலங்களை ஆக்கிரமித்து வந்தது. இந்த நடவடிக்கை யானது &nbsp;அமைதியை அழிக்கும் முயற்சி கள் மற்றும் சர்வதேசச் சட்டங்களை மீறும் அலட்சியப்போக்கு என கடுமை யாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.