தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரேலின் தாக்குதலால் நீடிக்கும் பதற்றம்; முறியும் நிலையில் அமைதி முயற்சி!

10 Apr 2026, 5:30 am
இஸ்ரேலின் தாக்குதலால் நீடிக்கும் பதற்றம்; முறியும் நிலையில் அமைதி முயற்சி!

இஸ்ரேலின் தாக்குதலால் நீடிக்கும் பதற்றம்; முறியும் நிலையில் அமைதி முயற்சி!

மேற்கு ஆசியாவில் கடந்த ஐந்து வாரங்களாக நீடித்து வந்த உக்ரைன் போன்ற போர் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தம், அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே பெரும் சவாலைச் சந்தித்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள கோரத் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஹேஸ்புல்லா அமைப்பினர் ஈரான் மீண்டும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் காரணமாக, ஒட்டுமொத்த பிராந்தியமும் மீண்டும் போரின் விளிம்பிற்குச் சென்றுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலும் சிதையும் போர் நிறுத்தமும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, லெபனான் மீது இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிலான மிக உக்கிரமான தாக்குதலை நடத்தியது. ‘ஆபரேஷன் எடர்னல் டார்க்னஸ்’ எனப் பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதல், லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டது.

இந்த வான்வழித் தாக்குதலில் இதுவரை 254 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்; 1,165 பேர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், “அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பிற்குப் பொருந்தாது” என்று குரூரமான முறையில் உள் நோக்கத்துடன் அறிவித்துள்ளது.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தானின் கூற்றுக்கு இது முற்றிலும் முரணாக உள்ளது. இஸ்ரேலின் இந்தச் செயல் போர் நிறுத்த ஒப்பந்தத்தையே கேலிக்கூத்தாக்கும் முயற்சி என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.