சமூக ஆர்வலர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த இஸ்ரேல் ராணுவம் :பெண்ணை அவமானப்படுத்திய அமைச்சர்
22 May 2026, 8:58 pm

சமூக ஆர்வலர்களை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த இஸ்ரேல் ராணுவம் :பெண்ணை அவமானப்படுத்திய அமைச்சர்

டெல்அவிவ், மே 22- காசாவிற்கு நிவாரணப்பொருட்களு டன் சமூக ஆர்வலர்களை கடத்திய இஸ்ரேல் ராணுவம் அவர்களை நிர்வா ணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளது.

குளோபல் சுமூத் புளோட்டிலா, ஃப்ரீடம் புளோட்டிலா கூட்டணியைச் சேர்ந்த கப்பல் குழுவினர் 430 பேர் காசா வில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு தேவை யான உணவு, மருந்து என நிவாரணப் பொருட்களுடன் கடல் வழியாக காசாவை நோக்கிச் சென்றனர்.

அவர்களை செவ்வாய்க்கிழமை (மே.19) இஸ்ரேல் ராணுவம் கடத்திச் சென்றது.

கடத்தப்பட்டவர்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அடைத்து வைத்த இஸ்ரேல் ராணுவம் அவர்களின் கண்களைக் கட்டி முட்டி போடவைத்து துப்பாக்கி முனையில் மிரட்டி சித்ரவதை செய்து மனித உரிமை நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளது.

கொடுமைகள் நடந்த இடத்தி ற்கு நேரில் சென்ற இஸ்ரேல் பாது காப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர், அயர்லாந்தைச் சேர்ந்த கேத்ரினா கிர ஹாம் என்ற பெண் சமூக ஆர்வலரை அசிங்கப்படுத்தி, கொ

டுமைப்படுத்தி யுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் வெளி யாகி உலகளவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இஸ்ரேல் அமைச்சரின் செய லுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

உலகளவில் கடும் எதிப்புகள் எழுந்த நிலை யில் உடனடியாக 430 ஆர்வலர்களை யும் இஸ்ரேல் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியது. கடத்தப்பட்ட சமூக ஆர்வலர்களை உடலை முழுமையாக முன்னோக்கி வளைத்து, நிமிர விடாமல் அவர்களின் முதுகை அழுத்தி பிடித்துக்கொண்டு குனிந்தவாறே நடக்கும்படி இஸ்ரேல் ராணுவம் அவர்களை கட்டாயப்படுத்தி யுள்ளது.

பலருக்கு இஸ்ரேல் ராணுவம் பாலி யல் தொல்லைகள் கொடுத்துள்ளது

கடத்தப்பட்டவர்களுள் ஒருவரை நிர்வா ணமாக்கி ஓடவிட்டு இஸ்ரேல் ராணுவத்தி னர் கேலி செய்து சிரித்த கொடூரமும் நடந்துள்ளது.

காமிராக்கள் முன்னதாக பகிரங்க மாக பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணு வம் இனப்படுகொலை செய்கிறது, சமூக ஆர்வலர்களை சித்ரவதை செய்கிறது.

கேமராக்கள் இல்லாத போது பாலஸ்தீன மக்கள் தினமும் என்ன மாதிரியான நரகத்தை அனுபவிப்பார்கள் என்பதை நினைத்து உலக நாடுகள் கோபப்பட வேண்டும் என இந்நிகழ்வை மேற்கோள் கட்டி உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இஸ்ரேலின் இந்த கொடுமைக ளுக்கு போலந்து, இத்தாலி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்நாட்டின் தூதர்களை நேரில் அழைத்து கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

“எந்தக் குற்றமும் செய்யாத போலந்து குடிமக்களை நீங்கள் இப்படி நடத்த முடியாது. எங்கள் குடிமக்களுக்கு நீதியும், உங்களுக்கு இதற்கான தண்ட னையும் கிடைக்க வேண்டும்” என போலந்து வெளியுறவுத் துறை அமைச் சர் ராடோஸ்லாப் சிகோர்ஸ்கி கண்டித் துள்ளார்.

“புளோட்டிலா பிரச்சாரத்தை எதிர்க்கும் நாடுகள் கூட, ஆயுதமற்ற சாதாரண குடிமக்கள் மீதான இந்த அநா கரிகமான சித்ரவதையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

இத்த கைய செயல்கள் இஸ்ரேலை உலக அரங்கில் தனிமைப்படுத்தும்.” என இத்தாலி வெளியுறவு அமைச்சர் ஆண்டோனியோ தஜானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.