இஸ்ரேல் ராணுவம் மீண்டும் அட்டூழியம் தெற்கு லெபனானில்குழந்தைகள் உட்பட 11 பேர் பலி
16 Aug 2026, 9:41 pm

இஸ்ரேல் ராணுவம் மீண்டும் அட்டூழியம் தெற்கு லெபனானில்குழந்தைகள் உட்பட 11 பேர் பலி

அன்சார், ஆக 16-தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

கடந்த ஜூன் 20ஆம் தேதி இஸ்ரேல் - லெபனான் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும் இஸ்ரேல் ராணுவம் இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், சனியன்று லெபனானின் தெற்கு பகுதியின் அன்சார் நகரின் புறநகர்ப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனை லெபனான் நாட்டின் பிரதமர் நவாப் சலாம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”தலைநகர் பெய்ரூட்டிலிருந்து தெற்கே 73 கி.மீ தொலைவில் உள்ள அன்சார் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 3 குழந்தைகளும், 2 பெண்களும் அடங்குவர். இஸ்ரேல் இந்த வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இது நல்லதல்ல. எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பும், அவர்களின் சொந்த நிலத்தில் வாழ்வதற்கான உரிமையும் விட்டுக் கொடுதலுக்கும் உட்பட்டவை அல்ல” என கண்டனம் தெரிவித்தார்.