கார்த்திக்கை தொடர்ந்து மலர்விழி என்பவரும் பிணமாக மீட்பு ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; கொலையா, தற்கொலைகளா?
25 Jun 2026, 9:06 pm

கார்த்திக்கை தொடர்ந்து மலர்விழி என்பவரும் பிணமாக மீட்பு ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; கொலையா, தற்கொலைகளா?

கோயம்புத்தூர், ஜூன் 25 - கோவை வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள ‘ஈஷா யோகா மைய’த்தில், அடுத்தடுத்து அரங்கேறும் மர்ம மரணங்கள், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வாரம், விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (29) என்ற ஈஷா மைய ஊழியர் மரணம் அடைந்த நிலையில், கடலூர் தனியார் மருத்துவக் கல்லூரி நூலகராகப் பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் மடத்துப்பட்டியைச் சேர்ந்த மலர்விழி (45) என்ற பெண், ஜூன் 22 அன்று ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று ஆண்டுகளாகக் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த மலர்விழி, தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்ததாகவும், நீண்ட நேரமாக கழிவறையை விட்டு அவர் வராததால் சந்தேகமடைந்த தூய்மைப் பணி யாளர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் மயங்கிக் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆலாந்துறை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் நடத்திய சோதனை யில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மர்ம பிரதேசமாகும் ஈஷா மையம்

கடந்த வாரம், விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் (29) என்ற ஈஷா மையத்தில் தங்கி பணியாற்றி வந்த கார்த்திக், தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈஷா மையத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் மொழிபெயர்ப்பா ளர்களின் உதவியுடன் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது, கார்த்திக் ஈஷா மையத்தில் உள்ள ஜென ரேட்டர் கட்டடத்தில் இருந்து கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈஷா யோகா மையத்தில் மரணங்களோ அல்லது சந்தேகத்திற்குரிய சம்பவங்களோ நிகழ்வது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இது போன்ற பல சம்பவங்கள் பொதுவெளியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

தொடரும் மரணங்கள்

2022 ஆண்டு, திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் ஈஷா மையத்திற்குப் பயிற்சிக்கு வந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர் கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப் பட்டார். இந்த மரணமும், கொலையா, தற்கொலையா என்று பெரும் விவாதங் களை ஏற்படுத்தியது. 2023 ஆண்டு, ஈஷா மையத்தில் தங்கிப் பணியாற்றி வந்த கணேசன் என்பவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது தொடர்பாக அவரது தாயார் தொடுத்த ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் நீண்ட காலம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு காலகட்டங்களில் தங்களது பிள்ளைகளை மூளைச்சலவை செய்து ஈஷா மையம் தடுத்து வைத்துள்ளதாகப் பெற்றோர் தரப்பில் நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விரிவான விசாரணை தேவை

ஈஷா யோகா மையத்தில் அடுத்தடுத்து நிகழும் இந்த மர்ம மரணங்கள் மற்றும் காணாமல் போதல்கள், காவல்துறை யினரின் முதல் தகவல் அறிக்கைகளோடு நின்று விடுகின்றன என்ற குற்றச்சாட்டை இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.

இம்மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஒன்றிய அரசின் உட்சபட்ச தலைவர்களுடனும், ஆட்சியாளர்களுடனும் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகளே, இந்த வழக்குகள் தீவிரம் பெறாமல் போவதற்குக் காரணம் என்று முற்போக்கு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. சாதாரண எளிய மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு மரணம் நிகழ்ந்தால் காட்டப்படும் தீவிரமும் சட்ட நடவடிக்கைகளும், ஈஷா போன்ற பெருநிறுவன ஆன்மீக மையங்களில் ஏன் தளர்வடைகின்றன என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

ஆன்மீகத் தேடலோடும், வாழ்வாதார நம்பகத்தன்மையோடும் ஈஷா மையத்திற்குள் நுழையும் மனிதர்களின் உயிரற்ற உடல்கள் மட்டுமே வெளியே வருவது தொடர்கதையாகக் கூடாது. அ.ர.பாபு