தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஈஷாவில் தொடரும் மர்ம மரணங்கள் கட்டிடத்தில் இருந்து குதித்து இளைஞர் உயிரிழப்பு

8 Jun 2026, 10:54 pm
ஈஷாவில் தொடரும் மர்ம மரணங்கள் கட்டிடத்தில் இருந்து குதித்து இளைஞர் உயிரிழப்பு

ஈஷாவில் தொடரும் மர்ம மரணங்கள் கட்டிடத்தில் இருந்து குதித்து இளைஞர் உயிரிழப்பு

கோவை, ஜூன் 8- ஈஷா யோகா மையம், பல்வேறு சர்ச்சை களுக்கும், விடைதெரியாத மரணங்களும் முற்றுப்புள்ளியின்றி தொடர்கிறது. அந்த வரி சையில், தற்போது மேலும் ஒரு இளைஞ ரின் மரணம் நிகழ்ந்திருப்பது மேலும் சந் தேகத்தை வலுவாக்கியுள்ளது.

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவா ரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத் தில் ஞாயிறன்று மாலை சுமார் 6.50 மணிய ளவில், கார் பார்க்கிங் வெளியேறும் வழிக்கு அருகே, இளைஞர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள் ளார்.

ஈஷாவின் பாதுகாப்புப் பணியாளர் கள் அழைத்ததன்பேரில் வந்த 108 ஆம்பு லன்ஸ் மருத்துவக் குழுவினர், அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரி வித்துள்ளனர். உயிரிழந்த நபர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள சிறுவாடி கிராமத் தைச் சேர்ந்த கார்த்தி (29) என்பது தெரிய வந்துள்ளது.

இந்த இளைஞர், கோவையில் தங்கி ஹிட்டாச்சி இயந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். சனியன்று ஈஷா மையத்திற்கு சென்றவர், அடுத்த நாளே பிணமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈஷா மையத்தில் இதுபோன்று நடை பெறும் மரணங்களுக்கு வழக்கமாக என்ன காரணம் கூறப்படுமோ, அதே பாணியில் இந்த மரணத்தையும் ’தற்கொலை’ என ஆலாந்துறை காவல்துறை தெரிவித்துள் ளது

. வளாகத்திற்குள் உள்ள ஒரு மின் விநியோக அறையின் மேற்கூரையில் ஏறிய கார்த்தி, அங்கிருந்து கீழே குதித்து தற் கொலை செய்து கொண்டதாக சிசிடிவி காட்சி களை முன்வைத்து போலீசார் கூறுகின்ற னர்.

மேலும், இதற்கும் ஈஷா மையத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், வேறு யாருக்கும் இதில் பங்கில்லை என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள் ளது. கார்த்தியின் உடல் பிரேதப் பரிசோ தனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆலாந்துறை போலீசார் பி.என்.எஸ்.எஸ் 194-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருவர் ஆன்மீக மையத்திற்குச் சென்று ஏன் திடீரென ஒரு கட்டிடத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? அதற்கான மன உளைச்சல் அவருக்கு எப்படி ஏற்பட்டது? என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. ஈஷா மையத்திற்குள் செல்லும் சாமானியர்கள் மட்டும் தொடர்ந்து இப்படி சந் தேகமான முறையில் உயிரிழப்பதும், காணா மல் போவதும், பின்னர் அது உடனடியாக ‘தற்கொலை’ என கோப்புகள் மூடப்படுவ தும் அங்கு வாடிக்கையாகி வருகிறது.

ஈஷா யோகா மையத்தில் தொடர்ந்து மர் மான முறையில் மரணங்கள் நிகழ்ந்து வருகிற நிலையில், ஈஷா வளாகத்திற்குள் எரி வாயு மாயனம் அமைக்கப்பட்டது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சி, மாதர் சங்கம் மற்றும் முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்துள்ளது. ஒன்றிய ஆட்சியாளர்களின் ஆசியில் நடைபெறும் இந்த யோகா மையத்தில் நடைபெறும் இத் தகைய மர்ம மரணங்கள் ஒன்றிரண்டு வெளி வருகிறது.

வெளிவராமல் மூடி மறைக்கப் பட்டது எவ்வளவோ என சமூக செயற்பாட்டா ளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். காவல்துறையின் இந்த சம்பிரதாய விசாரணைகளைத் தாண்டி, அங்கு தொடரும் இதுபோன்ற மரணங்களின் உண்மையான பின்னணி என்ன என்பதை வெளிப்படையாக விசாரிக்க வேண்டும் என்பதே சமூக செயற் பாட்டாளர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.