தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியாருக்கா?

23 Feb 2026, 5:35 pm
சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியாருக்கா?

சேலம் மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் தனியாருக்கா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

சேலம், பிப்.23- சேலம் மாநகராட்சி குடிநீர் விநி யோகம் தனியாருக்கு வழங்கப்படு வதாக அறிவிக்கப்பட்டு, 20 ஆண்டு களுக்கு 4300 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. இத் தகைய முடிவு பொதுமக்களின் நலன்களுக்கு எதிரானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, சேலம் மாநகரில் 4 மண்ட லங்களில் 60 கோட்டங்கள் (வார்டு கள்) உள்ளன. சுமார் 13 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அன் றாடம் சுமார் 2 லட்சம் மக்கள் பல் வேறு பணிகளுக்காக வந்து செல் கிறார்கள். நாள்தோறும் ஏறத்தாழ  15 லட்சம் மக்களுக்கு குடிநீர்  தேவைப்படுகிறது. பொதுமக்க ளுக்கு தேவையான குடிநீர் வழங்கு வது அரசின் கடமையாகும். சேலம் நகர் குடிநீர் திட்டம் 1936 ஆம் ஆண்டு நங்கவள்ளியிலிருந்து காவிரி குடிநீர் திட்டம் துவங்கி, 1953 ஆம் ஆண்டு மக்கள் பயன் பாட்டிற்கு வந்தது. இதன் மூலம் சேலம் மாநகர மக்களுக்கு நாள் தோறும் 140 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைத்தது. அதன்பிறகு மேட்டூர் தொட்டில்பட்டி தனி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, 1500 லட்சம் லிட்டர் குடிநீர் நாள்தோறும் பெறப் பட்டு வருகிறது. சேலம் மாநகரத்தில் 3500 தெருக் களில் 1.25 லட்சம் குடிநீர் இணைப்பு களும், 846 கி.மீ குடிநீர் பகிர்மான  குழாய்களும் உள்ளன. 57 நீர்த் தேக்க மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப் பட்டு வருகிறது. இந்த கட்டமைப் பின் தற்போதிய மதிப்பு பல ஆயிரம்  கோடி ரூபாய் ஆகும். இந்த பிர மாண்ட கட்டமைப்பை உருவாக்கி யவர்கள் அனைவரும் அரசு பொறி யாளர்கள், தொழில்நுட்ப வல்லு நர்கள், ஊழியர்கள் ஆவார்கள். இது அனைத்தும் மக்கள் வரிப்ப ணத்தில் உருவாக்கியவை ஆகும். சேலம் மாநகர மக்களுக்கு இரண்டு நாளுக்கு ஒருமுறை குடி நீர் விநியோகம் செய்வது சம்மந்த மாக சேலம் மாநகராட்சி மாமன்றத் தில் விவாதித்து, கடந்த 28.09.2022  அன்று சூரமங்கலம் மண்டலக் குழுத் தலைவர் தலைமையில் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பி னர்கள் உட்பட 24 பேர் கொண்ட  ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட் டது. அக்குழு இரண்டு மாதங்கள் ஆய்வு செய்து, குடிநீர் விநியோ கத்தை தனியாருக்கு தாரை வார்க்க தேவையில்லை. 100 கோடி  ரூபாய் செலவழித்து தேவையான உபகரணங்கள் வாங்கி, சில பரா மரிப்புப் பணிகள் செய்தால் இரண்டு நாளுக்கு ஒருமுறை குடிநீர்  விநியோகம் செய்யலாம். இதன் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நபர் ஒருவருக்கு 328 லிட்டர்  குடிநீர் விநியோகிக்க முடியும். மேலும், இதை செயல்படுத்திட போதிய பொறியாளர்கள், ஊழி யர்கள், தொழிற்நுட்ப வல்லுநர்கள் நியமித்திட வேண்டுமென்றும், ஒட்டு மொத்த குழாய்களையும் மாற்றியமைத்தால் அதிகபட்சம் ரூ.800 கோடி முதல் ரூ.1000 கோடி வரை மட்டுமே செலவாகும் என் றும், இதனை மாநகராட்சி நிர்வா கமே செய்ய முடியும் என்று  25.11.2022 ஆம் தேதி ஆய்வறிக்கை  சமர்ப்பித்துள்ளது. தற்போது சேலம் மாநகராட்சி 20  ஆண்டுகள் குடிநீர் விநியோகம் செய்ய மக்கள் வரிப்பணத்தில் உரு வாக்கிய மொத்த கட்டமைப்பை யும் தனியாரிடம் ஒப்படைத்து, அவர்களுக்கு ரூ.4300 கோடி மக்கள் பணத்தை வழங்கப்போகிறது. இத் தகைய முடிவு சேலம் மாநகர மக்க ளுக்கு எதிரானது. மேலும், தற் போதுள்ள பொது குடிநீர் குழாய் கள் முற்றிலும் அகற்றப்படும். குடி நீர் கட்டணம் தாறுமாறாக உயர்த் தப்படும். தனியார் நிறுவனம் லாப  நோக்கத்திற்காக மட்டுமே செயல் படுமே தவிர, சேவை மனப் பான்மையுடன் செயல்பட வாய் பில்லை. மாநகர மக்களின் அத்தி யாவசியமான குடிநீரை மக்க ளுக்கு வழங்குவதிலிருந்து மாநக ராட்சி நிர்வாகம் விலகி நிற்கும். வச தியற்ற ஏழை எளிய மக்கள் குடி நீரின்றி அவதிப்பட நேரிடும். மாநக ராட்சி அதிகாரிகளுக்கு வழங்கும்  ஊதியம் விரயமாகும். இதனை  ஒரு போதும் மாநகர மக்கள் ஏற்க மாட்டார்கள். மக்கள் எதிர்ப்பை மீறி  குடிநீர் விநியோகத்தை தனியா ருக்கு தாரைவார்க்க சேலம் மாநக ராட்சி முயற்சித்தால் மக்கள் ஆதர வோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். இவ்வாறு அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.